முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெனா

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 191

ஜெனா, இயற்பெயர் ஆர். ஜெனார்த்தனன். பிறப்பு கும்பகோணம். வசிப்பு - இராஜகோபாலபுரம் புதுக்கோட்டை.


பொருளியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

 கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தடம் பதித்தார். இவரது வாழ்வின் தாகம், வாழ்வைத் தேடி ஆகிய கவிதை நூல்கள் பெரும் வரவேற்பையும் பலரின் பாராட்டையும் பெற்றன.

காலத்தின் கர்ப்பத்தின் தினம் தினம் நிகழும் அற்புதங்களை ஆழ்ந்த மனிதாபிமானத்தோடு வியக்கத்தக்க வகையில் அழகிய கதைகளாக வடித்தவர். சிறுகதைகள் துளிர் எனும் இத்தொகுப்பு டிசம்பர் 1991 இல் வெளியானது.இந்நூலுக்கு அணிந்துரை புதுக்கோட்டை மன்னர் கல்லூரி  இந்தித்துறைத் தலைவர் டாக்டர் என்.ஸ்ரீதரன்.

இந்நூலுக்கான முன்னுரையில் ஒரு படைப்பாளிக்கு நான்கு முக்கிய குணாதிசயங்கள் இருக்க வேண்டுமென கூறுகிறார். 1. ஒரு படைப்பாளி மென்மையான உணர்வு கொண்டவனாக இருக்க வேண்டும். 2. அந்த நுண் உணர்வுகளை அவன் போற்றி வளர்ப்பவனாக இருக்க வேண்டும் 3. அவன் வளர்த்துக்கொண்ட அந்த மென்மையான உணர்வுகளை மன அதிர்வுகளை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற உந்துதல் அவனிடம் இருக்க வேண்டும் 4. அனுபவக் கருக்கொண்டு பக்குவப்பட்ட அவன் படைப்புகளை வெளிபடுத்த சரியான ஒரு வழிமுறையை அவன் மேற்கொள்ள வேண்டும்.

இந்த தகுதிகளில் என்னிடமிருப்பது மென்மையான உணர்வுகள் என்கிறார்.

இந்தத் தொகுப்பில் நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

1. சுதர்மம்
2. புதிய புறப்பாடு
3. துளிர்
4. நாராயணி பார்த்த படம்

கடைசி கதையான நாராயணி பார்த்த படம், வன்முறையாக திரைப்படத்தைக் காணும் குழந்தைகள் வீட்டில் அந்த வன்முறையை குடும்பத்தாருடன் பொருத்திப் பார்க்கும் கதை. அட்டன்பரோ எடுத்த காந்தி திரைப்படத்தைப் பார்க்கிறாள் நாராயணி.  காந்தியாக நடித்தவர் தன் அப்பாவைப் போலிருக்கிறார். காந்தியைச் சுட்டிவிடும் காட்சிக் காணும் அவள் தான் அப்பாவை யாரோ சுட்டுவிட்டதாக  கலங்குகிறாள்.  வீட்டுக்கு வரும் அவள் அப்பாவைப் பார்த்தும் அவரைத் தொட்டும் பார்க்கிறாள். இரவில் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. விழித்து விழித்து பார்க்கிறாள். அவளது தூக்கத்தில் வன்முறைக் காட்சி பெரும் வன்முறையை நிகழ்த்தி முடிக்கிறது.

இப்படியாக அன்றாடம் நிகழ்ந்தேறும் சம்பவங்களைக் கதையாக்கியிருக்கும் விதம் சிறப்பு.

இந்நூலை புதுக்கோட்டை மீரா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...