முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அ. அமீர்பாட்சா,

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 192

அ. அமீர்பாட்சா, அறந்தாங்கி. பிறப்பு - தஞ்சாவூர் மாவட்டம் , பேராவூரணி அடுத்த பூக்கொல்லை. தற்போது அறந்தாங்கியில் வசித்து வருகிறார். இளங்கலை சமூகவியல் படித்தவர். ஆன்மீகவியல் மற்றும் தத்துவவியலில் குறித்து உரையாற்றுவதில் விருப்பம் கொண்டவர்.

மதங்களும் மானுடமும் எனும் இந்நூல் இவரது முதல் படைப்பு.  நான்கு தலைப்புகளின் கீழ் மதம் மதம் சார்ந்த கற்பிதங்களை அலசுகிறார். 1.பகவத் கீதையும் கீதையை விமர்சிக்கும் மறுப்பக்கம் நூலுக்கு மறுப்புரையும், 2.இஸ்லாமிய மதமும் அதன் தத்துவ இயலும், 3.புத்தம் ஒரு புதிர்,  4.பின்னுரையில் எக்ஸிஸ்டென்ஷியலிசம் பற்றிய சில கருத்துக்கள்.

உலகம் எப்படி இயங்குகிறது,  என்று ஆராயாமல் உலகை இயக்குவது யார்? அதன் அடிப்படை என்ன? என்று ஆராய்ந்ததன் விளைவுதான், மானுடர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ளத் தூண்டியது. மனிதன் என்பவன் இப்போது என்னவாக உள்ளானோ,  அது அல்ல. இப்போது என்னவாக இல்லையோ, அதுதான் - போன்ற கருத்தியல்களால் இருத்தலியல் கோட்பாடுகளை விளக்குகிறார்.

கிரேக்க இதிகாச கதையில் ஸிஸிஃபஸ் எனும் கதாபாத்திரத்தைக் கொண்டு மனித வாழ்வு  அபத்தமென சொல்கிறார் காம்யு. ஸிஸிஃபஸைத் தண்டிக்கும் விதமாக கடவுள் அவனுக்கொரு தண்டனை வழங்குகிறார். ஒரு பாறையை அவன்  உருட்டிக்கொண்டு மலையின் உச்சிக்குச் செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து அதைக் கீழே உருட்டிவிட வேண்டும்.மீண்டும் அதை மேலே கொண்டு போக வேண்டும். மறுபடியும் அதைக் கீழே உருட்டிவிட வேண்டும். இந்த வேலையை அவன் முடிவில்லாமல் செய்துகொண்டிருக்க வேண்டும். இதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா,? இதைப் போன்றதுதான் மனித வாழ்க்கை.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதைத் தத்துவ இயலாளர் அல்ஃபாராபி சொன்ன 'இருப்புத் தத்துவம்' கொண்டு விளக்குகிறார். "ஒரு பொருள் இருக்கிறது என்றால் அப்பொருளின் இருப்புக்கு ஒரு காரணம் நிச்சயம் இருக்க வேண்டும் . இவ்விதம் இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு காரணத்துடன் இருக்கும். தன் இருப்புக்கு ஒரு காரணம் தேவையில்லாததுமான ஒரு பொருளே கடவுள் ஆகும்".

இப்படியான மதத் தத்துவங்கள்,  மதக்கோட்பாடுகள், எதிர்நிலை  மறுப்புக் கோட்பாடுகள்  இவற்றின் தொகுப்பு இந்நூல். 2007 ஆம் ஆண்டு இந்நூலை எழுதி முடித்து 2023 ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்திருக்கிறார். Man is a bridge between Animal and Divine என்று ஓஷோ Man is combination of animaltity humanity and Divinity என்று விவேகானந்தர் சொன்ன இவ்விரு கருத்துகளும் இந்நூலுக்கு ஆதாரமாக உள்ளன.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...