முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புலவர் க.மு.சுந்தரகணேசன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 186

புலவர் க.மு.சுந்தரகணேசன்,  துணைப் பேராசிரியர், மன்னர் கல்லூரி ,புதுக்கோட்டை. இவர் சக்திதாசன் என்கிற புனைப்பெயரிலும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் பழநி அந்தாதி  முக்கியமானது.

புதுக்கோட்டை நாரதர்மலை மாரியம்மன் பிள்ளைத்தமிழ், எனும் இந்நூல் முதற்பதிப்பாக ஏப்ரல் 1972 இல் வெளியானது. தமிழக அரசு கல்லூரிக் கல்வி நெறியாளர் அனுமதி பெற்று வெளியானது.  சேலம் மாவட்டம் எழில்மலர்ப் பதிப்பகம் மூலமாக வெளியான இந்நூலை புதுக்கோட்டை செந்தமிழ்ப் பதிப்பகம் அச்சிட்டு வெளியிட்டது.

இந்நூலுக்கு பதிப்புரை கு.பெ.மகாலிங்கம்,  அணிந்துரை தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரி கவிஞர்கோ,  பாவலரேறு வித்துவான். ச. பாலசுந்தரம் அவர்கள்.

இந்நூலின் முன்னுரை இவ்வாறு பேசுகிறது.

இறைவழிபாடு, எம்குடும்பத்தாரின் அகத்தேயும் புறத்தேயும் நீங்காத சொத்து. இந்நிலையில் சத்திய சோதனையில் ஆழ்த்திய அன்னை பராசக்தி எம் உள்ளத்தில் அவளே நின்று பிள்ளைத்தமிழ் பாடத்தூண்டா விளக்காணாள். சத்திய சோதனையில் வென்றது - அவளோ? நாமோ? எல்லாம் அவளே; அவள் பிள்ளைத்தமிழ் பாடல் வெளிவர எம்மைத்துணையாக்கினாள் என உணர்கிறோம்.

இந்நூலை நாரதர்மலை மாரியம்மனுக்குப் படைக்கின்றோம். "பழநி அந்தாதி' யைப்போல் இதனையும் ஏற்று வெளியிட்டு உதவிய எழில் மலர்ப் பதிப்பகத்தாருக்கு, எனது நன்றியும் வணக்கமும் உரிய. அணிந்துரை தந்து சிறப்பித்த எனது கெழுதகு நண்பர் பாவலர் திரு ச. பாலசுந்தரம் அவர்கட்கு எனது நன்றியை உரித்தாக்கி, இதனை கற்று அன்னையின் அருள் பெறவேண்டுமெனத் தமிழ்ப் பயின்றார் எல்லோரையும் கேட்டுக்கொள்ளுகிறோம்.
புதுக்கோட்டை 6-4-723
அன்பன்,
'சக்திதாசன்'


பிள்ளைத் தமிழ் பத்துப் பருவங்களில் ஒன்றான தாலப்பருவம் இவ்வாறு பாடுகிறது.

பொதிகைத் தென்றலு டன்போத்து
பொங்குந் தமிழை நனிவளர்க்கும்
புதுகை மன்னர் மடிவளர்ந்த
பொய்யா மொழியே செந்தமிழே!

எதுகை என்னும் பாவலர்க்கு
ஏற்ற கையாய் இனிதோங்கி
என்றும் அவர்தம் மதுகைக்கு
இனிமை சான்ற துணையானாய்!

மதிகைக் கொண்டு புலனடக்கி
மாலும் அயனும் காணரிய
மலரே! நாரதர் மலைவாழும்

மயிலே! என்றன் மனக்கோயில்

பதியாய் விழைந்து அமர்ந்தவளே பண்ணே, தாலே தாலேலோ
பயனே, அமுதே! பார்புகழும்
பாவாய் தாலே தாலேலோ.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...