புதுக்கோட்டை எழுத்தாளர் - 197
புதுகை சத்யா , ஆலங்குடி.
புன்னகை பூக்கள் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூலுக்கு மதிப்புரை பாண்டியன் புத்த அகம் ப.முத்துப்பாண்டியன்.
இவரது கவிதைகள் மனிதர்களின் இயலாமை குறித்து ஆதங்கப்படுகின்றன. காதல் மீது உணர்ச்சியும் நட்பு மீது மரியாதையும் கொள்கின்றன.
இத்தொகுப்பில் ஒரு கவிதை
விரல்களின் கைதி
உயிர் இல்லாத உருவம் கொண்டவன்
உயிர் பறிக்கும் ஆற்றல் கொண்டவன்
சுவாசிக்கும் போது சுகமாக இருப்பான்
சுவாசித்த பின்னே அனல்
குழம்பாக அரிப்பான்
மனித குலத்திற்கு அவன் யோகி
மனித உயிர்க்கோ இவனே தியாகி
இரண்டு விரல்களுக்குள் அடிமையாய்
வசிக்கிறான்!
இடைத்தரகராய் நம் உயிரையும்
பறிக்கிறான்
சிகரெட்!

கருத்துகள்
கருத்துரையிடுக