முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கி.லட்மண சர்மா

 புதுக்கோட்டை எழுத்தாளர் – 198


கி.லட்மண சர்மா,  இந்திய இயற்கை வைத்யர். புதுக்கோட்டை கணேஷ் நகரில் சர்மா இயற்கை வைத்திய இல்லம் நடத்தியர். இவர் புதுக்கோட்டை THE INDIAN INSTITUTE IF NATURAL THERAPEUTICS  எனும் நிறுவத்தில் மேலாளராகப் பணியாற்றியவர். மேலும் இவர் தலைமையில் அகில பாரத ப்ராக்ருதிக சிகித்ஸா ஸம்மேளனம் ஏழாவது மகாநாடு, மே – 1945 ஆம் நடைபெற்றது.

பத்ய உணவு, இவரது மூன்றாவது நூல். இதுதவிர பூர்ணசக்தி, உபவாஸதத்வம் எனும் இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். பத்ய உணவு எனும் இந்நூல் இயற்கை இல்லம், புதுக்கோட்டை ( திருச்சி) எனும் பதிப்பகத்தின் மூலம் ஆகஸ்ட், 1944 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளியானது.

ப்ரபல இந்திய இயற்கை வைத்யரான ஸ்ரீ கி. லட்மண சர்மாவினால் ஊருக்கு ஒதுப்புறமாகவும் காற்றோட்டமும், ஜலவசதியிமுள்ள உயயர்ந்த ஸ்தலத்தில இயற்கை வைத்யஇல்லம் நிறுகப்பட்டிருக்கிறது. அங்கு சிகிச்ஸைபெறும் போது வைத்ய முறைகளைத் சந்தேகமறக் கற்றுக்கொள்ளலாம்.

மானேஜர்

சர்மா இயற்கை வைத்ய இல்லம்

கணேச நகர்

புதுக்கோட்டை ( திருச்சி) என்கிற குறிப்பு இடம் பெற்றுள்ளது.

இந்நூலுக்கான முன்னுரையில், உயிர்ச் சக்தியானது ஒரு நிர்மாண வேலைக்காரன், என்று இதன் முன் குறிப்பிட்டோம். அதாவது உடலென்னும் வீட்டை நிர்மித்து அதை அன்றன்று பழுது படாது காக்கும் சக்தியே உயிர். இதுவே முந்திய நூல்களின் சுருக்கமாகும். நிர்மாண வேலை செய்பவன் சிற்பி எனப்படுவான். உயிரை லெட்சுமண சிற்பி என்று சொல்லவேண்டும்.

இச்சிற்பி உணவாகிய சரக்கைக் கொண்டு தன்னாலாகும் நிர்மாண வேலைகளை நடத்துகிறது. உணவானது ஐவகை அவற்றில் தாழ்ந்தது வாயினால் உட்கொள்ளும் உணவு. அத்தாழ்ந்த உணவு இயற்கைக்கு மாறாக உட்கொள்ளப்படுமானால் உடல்நிலைத் தவறிக் கெடும் என குறிப்பிடுகிறது.

இந்நூலில் உணவின் தன்மை – அதாவது நல்ல உணவு, நல்லதல்லாத உணவு – பற்றி விவரிக்கிறது. நல்ல உணவானது உயிருக்கு உதவியாவது. நோய்ச்சரக்குகள் உடலில் குவியாகமலிருப்பதற்கு ஏற்ற உணவு அது. நோய்ச் சரக்குகளை வெளியேற்றும் தொழிலாகிய நோயில் உயிருக்கு உதவி செய்வதும் அதுவே. இவ்விருவகை உதவியாலும், அவ்வுணவு பத்திய உணவு எனப்படும்.

இந்நூலில் உணவுச் சத்துக்கள், உணவு வகைகள், தானிய வகைகள், முக்குணங்கள், சமையல், பச்சை உணவு, தனிஉணவு, கலப்புணவு, நோயில் பத்யம், முளை கண்ட தான்யங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் இந்நூல் உணவு குறித்து பேசுகிறது.  

நோயில் பத்யம் எனும் தலைப்பு உணவு கட்டுப்பாடுகள் குறித்து பேசுகிறது.

1.நடமாட்டமும் ஜீர்ண சக்தியும் பசியும் உள்ளவர் தினம் ஒரே தடவை சாப்பாட்டோடு இருக்க வேண்டும்.

2. அது கறிகாய்களின் கூட்டுடன் சாதமாக அல்லது ஸாத்விக இட்டலி, அல்லது பொங்கலாக இருக்க வேண்டும்.

3. கறிகாய் அதிகமாயும் மற்றவை குறைவாயும் இருக்க வேண்டும். எல்லாம் ஒரே சாப்பாடாக சாப்பிட வேண்டும். தாய் வகைகளை முற்றிலும் விலக்கிவிட்டு கறிகாய்களையும் தேங்காயையும் மட்டும் சாப்பிடுவது உத்தமம்.

4. தேங்காய் ஜீரணத்துக்கேற்றபடி கறிகாய்க்கூட்டில் சேர்க்க வேண்டும். புளிப்புள்ளவைகொழம்பு, சாறு, மோர். இவை தள்ளுபடி. ஆனால் புளியாத மோரைத் தண்ணீர்போல் பின்னாடி குடிக்கலாம்.

5.மலக்குடலின் தாழ்வுள்ளவர்கள் கீரை அ்லது காய்களைத் தேங்காயுடன் மாத்திரம் சாப்பிட வேண்டும். மற்ற உணவை அடிக்கடி சேர்க்கலாகாது.

 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...