முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சி.மு.சி.சின்னையா செட்டியார்

புதுக்கோட்டை எழுத்தாளர் – 194

சி.மு.சி.சின்னையா செட்டியார், புதுக்கோட்டை சமஸ்தானம் பனையப்பட்டி புண்ணியசீலர் சி.மு.முத்துக்கருப்பஞ்செட்டியார் அவர்களின் குமாரர் சி.மு.சி. சின்னையா செட்டியார் என்று குறிப்பிடப்படுகிறார். சுவாநுபவத் திருவாக்கு என்னும் பாராயண சிந்தாமணி எனும் இந்நூல் மதுரை பிரஹ்மஸ்ரீ யோகானந்த சுவாமிகள் ஆக்ஞையின் படி புதுக்கோட்டை சமஸ்தானம் பனையப்பட்டி புண்ணிய சீலர் சி.மு.முத்துக்கருப்பஞ் செட்டியார் அவர்கள் குமாரர் சி.மு.சி.சின்னையா செட்டியாரால் திரட்டி அச்சியற்றப்பெற்ற்து. ஆண்டு – 1926.

இந்நூலுக்கு முகவுரை எழுதியிருக்கும் சி.மு.சி. சின்னையா செட்டியார்

பரசிவ ஞானத்தில் விருப்புடைய அறிஞர்கள் பிரதி தினமும் பாராயணஞ் செய்வதற்கு அனுகூலமாய்ச் சிவானுபவப் பேற்றை அடைந்த மஹாத்மாக்களின் அருமைத் திருவாக்குளைப் பழைய பிரதிகளுக்கிணங்க ஒரே புத்தகமாகப் பேரறிஞர்களின் அனுமதியில் பகவானருளால் திரட்டிய இந்நூல் முதற்பதிப்பில் அச்சிட்ட 2000 புத்தகம் செலவாகிவிட்டபடியால் இரண்டாம் பதிப்பில் 2000 புத்தகமும் அடியேனால் அச்சியற்றப் பெற்றது. இப்புத்தகம் சாதுக்களுக்கு இனாமாகக் கொடுக்கப்படும். இதில் பிழையுளதாயின, க்ஷமிக்குக.

இந்நூற் பெயர் எனும் தலைப்பிட்ட வெண்பா இவ்வாறு பாடுகிறது.

ஆரண முடிவத் வைத முத்திப்பே றடைவ தற்கு

நாரண னருளால் மேலோர் நவின்றசா தனமனைத்துஞ்

சீரணப் பன்னூ லாய்ந்து திரட்டியச் சிட்ட விந்நூல்

பாரண மக்க ளுக்குப் பகர்சிந்தா மணியா மாதோ.

 

இந்நூல் மூன்று இடங்களிலும் எழுதிப் பெற்றுக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.    பிரஹ்மஸ்ரீ யோகானந்த சுவாமி அவர்கள்

      பிட்டுத்தோப்புக்கடுத்த அழகாடி மடம், மதுரை

2.    சி.மு.சின்னையா செட்டியார் 138, பவழக்காரத் தெருவு, மதராஸ்

3.    சி.மு. சின்னையா செட்டியார், பனையப்பட்டி, குளிபிறை போஸ்டு, புதுக்கோட்டை சமஸ்தானம்.

இந்நூல் பாராயண சிந்தாமணி, ஔவையார் அருளிச் செய்த விநாயகரகவல்,  குமரகுருப சுவாமிகள் அருளிச் செய்த திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா, ஸ்தோத்திரப் பாக்கள், ஞானிகளின் பெருமை, தேவாரம் – திருஞானசம்பந்த சுவாமிகளருளியது, திருநாவுக்கரசு சுவாமிகளருளியது, சுந்தரமூர்த்தி சுவாமிகளருளியது, திருவாசகம் – ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகளருளியது, யாத்திரைப் பத்து, நால்வர் மகிமை, சிவப்பிரகாச சுவாமிகளருளிய நால்வர் நான்மணிமாலை, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமூலநாயனார் அருளிய திருமந்திரம், பட்டணத்தார் அருளிய பாடல்கள், அருணகிரிநாதர் அருளிய பாடல்கள், சேக்கிழார் அருளிய பெரியபுராணம், திருவாய்மொழி, வில்லிபுத்தூராழ்வார் அருளியது, பகவற்கீதை 12 ஆவது பக்தியுாக வத்தியாயம், ஈஸ்வர கீதை, பிரமகீதை, ரிபுகீதை, ஞானவாசிட்டம், உபசாந்திப் பிரகரணம், கைவல்லிய நவநீதம், சொரூபசாரம், தத்துவராய சுவாமிகள் அருளிய பாடுதுறை, ஸ்ரீ குமாரதேவர் அருளிய அத்துவிதவுண்மை, ஸ்ரீ சதாசிவப் பிரஹ்மேந்திரர் அருளிய அத்துவிதரமஞ்சரி, நிஷ்டானுபூதி, தாயுமானவர் அருளியது, சிவஞான வள்ளலார் பாடல்கள், திருவள்ளுவர் அருளிய திருக்குறள், ஔவையார் அருளிய பாடல்கள், சிவவாக்கியர் பாடல்கள், திருப்போரூர்ச் சந்நிதி முறை, குகை நவசிவாயர், குரு நமசிவாயர், குசேலோபாக்கியானம், மூவர் அம்மானை, நாலடியார், பிரபோத சந்திரோதயம், சிவபோகசாரம், ஞானசுகாதீத வெண்பா, சசிவன்ன பேதம்,  பிரத்தியட்சானுபூதி விளக்கம், இராமலிங்கசுவாமிகள் அருட்பா, ஸ்ரீ சங்கராசாரியார் அருளிய விவேகசூடாமணி, விவேகஷட்கம், ஆத்மானுசந்தானக்கிரமம், ப்ரஹ்ம நாமாவலீ, முத்துராமலிங்க சுவாமிகள் அருளிய சுவாநுபவத் திருவாக்கு, கோயிலூர் அடியார்குழாத்துள் ஒருவரியற்றிய குரும்பரம்பரை வணக்கம், திருநெல்லையம்மை வணக்கம், அர்ச்சனை நாமங்கள், ஸ்ரீசங்கராசார்ய சுவாமிகளின் அஷ்டோத்ர சத நாமங்கள் ஆகியவற்றின் தொகுப்பு.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...