முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'சக்தி’ சித்தார்த்தன்.

 புதுக்கோட்டை எழுத்தாளர் – 205

‘சக்தி’ சித்தார்த்தன். இவரது இயற்பெயர் கு.சிவசுப்பிரமணியன். இலக்கிய வித்தகர் என்று அழைக்கப்பட்டவர். பிறப்பு திருமயம். தற்போது பெங்களூரில்  வசித்து வருகிறார். மாணவர் பருவத்தில் ‘சக்தி’ எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதியதால்  பெயருக்கும் முன்னே சக்தி சேர்ந்துக்கொண்டது. மாணவர் பருவத்தில் ‘விவேகானந்தர்’ என்கிற கையெழுத்து பிரதியை நடத்தியவர். இவர் கடியாபட்டியில் படிக்கின்ற பொழுது அப்பள்ளிக்கு பெருந்தலைவர் காமரா்ஜர் வருகைத் தந்தார். அவ்விழாவில் பாரதியார் பாடலைப் பாடி பெருந்தலைவரிடம் பாராட்டுப் பெற்றவர். ‘கல்பனா’ என்ற மாத இதழுக்குச் சில ஆண்டுகள் ஆசிரியராக இருந்துள்ளார். 

       தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் மாவட்டச் செயலாளராக இருந்தவர். தோழர் ஜீவானந்தம் தொடங்கிய கலை இலக்கியப் பெருமன்றத்தில் ஈடுபாடு கொண்டு செயலாற்றியவர். மீ.சேதுராமன், புதுகைத் தென்றல் மு.தர்மராஜன் தொழிற்சங்கத் தலைவர் ஜகன் உடன் இணைந்து புதுக்கோட்டை நகர்மன்றத்தில் பாரதி விழா நடத்தியிருக்கிறார்.

       சித்தார்த்தன் இயல்பாகவே இசையிலும் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இவரது முதல் நாவல் ‘யாதும் ஊரே’. இந்நூல் சங்க காலத் தமிழர் வாழ்வைச் சித்தரிக்கிறது. பொதுவுடைமை கொள்கையில் மலர் வீசும் மலராக இருந்த இவர் எழுதிய நூல்கள் ஏராளம். அரசியல் தொழிற்சங்க பின்னணியில் ‘வைசாலி’. தென்மாநிலச் சாதி கலவரங்கள் பற்றி ‘காட்டுத்தீ’, தஞ்சை மாவட்ட இசைப் பின்னணியில் ‘ ஜீவன் முக்தன்’, பல்லவர் ஆட்சியின் மறைவும் சோழர் ஆட்சியின் எழுச்சியும் குறித்த ‘ செவ்வானம்’ யாவும் இவர் படைத்த நாவல்களில் முக்கியமானவை. இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு, ‘ ஒன்றிரண்டு மானிட ஜாதி’, ‘வானவில்’ தலைப்பில் மூன்று கவிதைத் தொகுப்புகளும், ‘காலச்சுவடுகள்’, ‘மீட்டும் ஒரு முறை’ எனும் தலைப்பில் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். 

'சிங்கமும் சிறு குயிலும்’ எனும் தலைப்பில் ஒரு  பயண காப்பியமும், ‘ எல்லைக்கு அப்பால்’, ‘ ஆழிசூழ் அமெரிக்கா’ என இரு பயண கட்டுரை நூல்களும் எழுதியவர். ‘ பொருநை எனும் கருணை’ என்ற தலைப்பில் தாமிரபரணி நதிக்கரையில் வளர்ந்த நாகரீகத்தைப் பற்றி இவர் எழுதிய காவியம் இவருக்குப் பெருமைத் தேடி தந்தது.

‘ ஆடுவோம் பாடுவோம் அறிவியலை நாடுவோம்’ எனும் சிறார்களுக்கான பாடல் நூலையும் எழுதியவர்.  இதுதவிர, சுதந்திரப் பொன்னேடுகள், அக்னி, இன்று காந்தியம் என மூன்று கட்டுரை நூல்கள் எழுதியுள்ளார்.

பொருத்தம், வெள்ளாடு, இல்லாத இடமே இல்லை,  அந்தமானும் சிந்துவும் என்ற இவரது நாடகங்கள் மேடையேறியுள்ளன. சென்னை பாரதி கலைக்கழகம் இவருக்குக் கவிமாமணி என்று பட்டம் வழங்கி கவுரவித்தது.

இவரது சமீப படைப்பு சமுத்திர குமாரர்கள் வரலாற்று நாவல் - 5 பாகங்கள். 2160 பக்கங்கள்,  பண்மொழி பதிப்பகம்.

புதுக்கோட்டையில் பிறந்த எழுத்தாளர்களில் வாண்டுமாமாவிற்கு அடுத்து அதிக நூல்கள் எழுதிய எழுத்தாளர் இவர்,,,







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...