புதுக்கோட்டை எழுத்தாளர் - 206
ப.சிகாகிரீசன், புலவர். தமிழ்ச்சுடர், சொற்பொழிவுச் செம்மல் என்று அழைக்கப்பட்டவர். 1961 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் உரையாற்றிய கி.வா.ஜ " அனுபூதிக்கு ஒரு அருணகிரி. அருந்தமிழுக்கு ஒரு சிகாகிரி" என்று பாராட்டுப்பெற்றவர். சிகாகிரி என்பது குடுமியான்மலை சிவனின் பெயர்.
இவர் புதுக்கோட்டை கோனாபட்டில் பிறந்தவர். இவரது தந்தையார் பஞ்சாபகேச தீட்சிதர் சமஸ்தான ஆஸ்தான வித்வானாக இருந்தவர். மேலும் புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி உருவாகக் காரணமாக இருந்தவர்.
சிகாகிரீசன், ஸ்ரீ புவனேஸ்வரி விஜயம் மாத இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். திருக்கோகர்ணம், கீரனூர், பெருங்களூர், காந்திநகர் பள்ளிகளில் தமிழாசிரியராக இருந்தவர். கம்பராமாயணம் சொற்பொழிவுக்குப் பெயர் போனவர். இவரது சொற்பொழிவைப் பாராட்டி அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் கே.வி.சுப்பையா, ' கம்பன் கவியமுதன் 'என்கிற பட்டத்தைக் சிகாகிரீசனுக்கு வழங்கினார். புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் இவருக்கு உபன்யாச சிரோமணி எனும் பட்டத்தை வழங்கியது. மேலும் இவருக்கு சொல்லின் செல்வர், பன்மொழி வித்தகர் எனும் பட்டங்கள் உண்டு.
இவர், கம்பகாவியம் ஒரு தேசிய நூல், கீதை காட்டும் நெறி என இரண்டு நூல்கள் எழுதியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக