முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மு.ரா.கந்தசாமிக் கவிராயர்

 புதுக்கோட்டை எழுத்தாளர்கள் - 203 (புதுக்கோட்டையை எழுதிய நூல்கள்)

அரிமழத்தலபுராணம் - மூலமும் குறிப்புரையும்,

இந்நூலை எழுதியர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர். இவர் சமஸ்தான வித்வான் ஸ்ரீமத் இராமராமிக் கவிராயரின் குமாரர். மதுரை விவேகபாநுப் பத்திராதிபர். இந்நூலை இயற்றும்படி கேட்டுக்கொண்டவர் அரிமழம் மு.அ.செ. முத்தையா செட்டியாரின் குமாரர் செல்லப்ப செட்டியார். இந்நூல் இயற்றப்பட்டு வெண்பாக்களைப் பரிசோதித்தவர், சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர். 1907 ஆம் ஆண்டு மதுரை விவேகபாநு அச்சியந்திரசாலையில் பதிக்கப்பட்டது. இந்நூலின் மொத்தப் பக்கங்கள் – 165.

அரிமழத்தார் என்பது சிவபெருமான். இந்நூலுக்கு சாற்றுக்கவிகள் நால்வர் எழுதியுள்ளார்கள். அரிமழம் ஸ்ரீசிவாந்நதசுவாமி, அவரது மாணாக்கரும் ஸ்ரீ கா.ந.நரசிம்மசாஸ்திரியின் புத்திரருமாகிய ஸ்ரீ காமாட்சி சாஸ்திரி மற்றும் சோழவந்தான் வித்துவான் ஸ்ரீமத் அ. சண்முகம்பிள்ளை, முறையூர் ஸ்ரீமாந்பழ.சி.ஷண்முகஞ்செட்டியாரின் புதல்வர் சமூக வித்துவான் கொட்டாம்பட்டி மகா ஸ்ரீ கருப்பையாப் பாவலர் என நால்வர் எழுதியுள்ளனர்.

இந்நூலில் வாழ்த்துப் பாடலுக்கும் முன்பாக பரமசிவன், உமையம்மை, சபாநாயகர், சிவகாமியம்மை, சுந்தரேசர், மீனாட்சியம்மை, தட்சிணாமூர்த்தி, முன்னாண்ட விநாயகர், பரிபாலவிநாயகர், குமரக்கடவுள், பாலதண்டாயுதபாணி, செல்லத்தையனார், முத்தையனார், வயிரவர், விளங்கியம்மன், சரசுவதி, திருநந்திதேவர், திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசக சுவாமிகள், தண்டியடிகள், மற்றைநாயன்மார் ஆகியோர் பாடப்படுகிறார்கள்.

இந்நூல் காப்பு, பாயிரம், நாட்டுப்படலம், திருநகரப்படலம், நைமிசாரணியப் படலம், தலவிசேடப் படலம், தீர்த்தவிசேடப்படலம், மூர்த்திவிசேடப்படலம், இந்திரன் பூஜித்தபடலம், சந்திரன் பூஜித்தபடலம், வெள்ளாற்றுப்படலம், சுவேதகேது பூஜித்தபடலம், தடாதகைப் பிராட்டியார் தவம்புரி படலம், சுந்தரேசப்படலம், திருப்பணிப்படலம், செல்லய்யனார் திருவிளையாட்டுப் படலம், திருவிழாப்படலம், விளங்கியம்மன் விளங்கியபடலம், திரிபதார்த்த சிந்தனைப்படலம் ஆகிய படலங்களாக இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. நாட்டுப்படலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகள் பாடப்பட்டுள்ளன. திருநகர்படலத்தில் புடைநகர், இடை நகர், உண்ணகர், கணிகையர் வீதி, கடை வீதி, சூத்திரர் வீதி, வைசியர் வீதி, அரசர் வீதி, அந்தணர் வீதி என வீதிகள் பாடப்பட்டுள்ளன.

 

இந்நூலின் இறுதியில் குறிப்புரை கொடுக்கப்பட்டு அகராதி வரிசையில் இல்லாமல் பாடல்கள் வரிகளிலுள்ள சொற்களுக்குப் பொருள் விளக்கம் தருகிறது.

இந்நூலில் பாயிரம் – காப்பு இவ்வாறு பாடப்பட்டுள்ளது.

பொன்பரவு வெண்கயிலைப் பொருப்பரசு நிம்பமலர்

        பொறுத்த நொம்பை

யின்பமுற மணந்துகலந் தீன்றெடுப்ப வளர்ந்துதனை

        யிறைஞ்சிப் போற்று

மன்பருளந் தொறும்பூத்துக் காயாது கனியுமத்தி

        யடியி னீழன்

முன்பரவிப் புகுந்தவரே வெம்பிறவி யிகந்துநல

        முழுகுவாரே.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...