முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அருள்வாக்கி அப்துல் காதிர்

 புதுக்கோட்டை எழுத்தாளர் -219

அருள்வாக்கி அப்துல் காதிர் ( பிறப்பு -  1866 ஆம் ஆண்டு கண்டி – போப்பிட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர்). இஸ்லாமிய ஆன்மீகக் கவிஞர், சந்தத் திருப்புகழ்ப் பாடிய புலவர் என அடையாளம் காணப்பெற்றவர்.

அருள்வாக்கி என்பது பதினாறு வயதில் யாழ்ப்பாணத்தில் புலவர்கள் மத்தியில் தனது செய்யுளாற்றலை வெளிப்படுத்தி 'அருள்வாக்கி' எனும் சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர். ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்திற்கு ஒளிபாய்ச்சியவர்களில் ஒருவர். பதங்கள், சிறப்புப் பாயிரங்கள், சாற்றுக்கவிகள், வாழ்த்துக்கவிகள், சரமகவிகள், சீட்டுக்கவிகள் என்று பாடியுள்ளார். இவர் மகாகவி சுப்பிரமணிய பாரதி காலத்தவர். இருபத்து எட்டு நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார்.

 இவர் இயற்றிய நூல்களில் ஒன்று "திருமயம் காட்டுபாவா சாகிபு ஆண்டவர் காரணக்கும்மி". 




காட்டுபாவா பள்ளிவாசல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்தில் மிக முக்கியமான வழிபாட்டு தளம். பிராமணப் பெண்களைக் கள்வர்களிடமிருந்து காப்பாற்றி உயிர்த்துறந்தார்.  ஒரு பெரியவர் கனவில் தோன்றி சொன்னதன் பேரில்  நவாப் ஆட்சிக்காலத்தில் காட்டுபாவா உயிர் துறந்த இடத்தில்  தர்கா எழுப்பப்பட்டு இன்று அனைத்து சமயத்தவர்களும் வழிபடும் தலமாகியுள்ளது.

இந்நூல், காட்டுபாவா சாகிப்பின் வீரம், அன்பு, காதல், பக்தி முதலான நவரசச் சுவைகளையும் அடக்கியதாக இக்காரணக் கும்மிப் பாடல்கள் அமைந்துள்ளன. நாகூர் ஆண்டகையெனப் போற்றப்படும் சாஹுல் ஹமீதொலி நாயகரின் பேரர் இவர்.  காட்டு பாவா சாகிபு அவர்களின் வீரத்தையும் தியாக வரலாற்றையும் அன்னார் நிகழ்த்திய அற்புதங்களையும் இக்கும்மிப் பாடல்களின் வழியே பாடுகின்றன.

இந்நூலின் முகப்பு இவ்வாறு கூறுகிறது. திருப்பத்தூர் ஆ.பி.அல்லாபிச்சை ராவுத்தரவர்கள் குமாரரும் அதே ஊர் வித்துவசிரோமணி மகுமூதுமுத்துப்பாவாப் புலவரவர்களின் மாணாக்கருமாகிய அருள்வாக்கி அப்துல் காதிறுப்புலவரவர்கள் இயற்றியது. 

இந்நூல் கொழும்பு கும்பனித் தெருவில் புத்தகவியாபாரம் எம். எஸ். முகியித்தீன் சேராமுதலியார் அவர்கள் முயற்சியால் சென்னை வாணீவிலாச அச்சுக்கூடத்திற் பதிக்கப்பட்டது. ஆண்டு – 1905.

இருபத்து நான்கு பக்கங்களில் அமைந்த இந்நூலில் 92 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்குச் சாத்துகவி பாடியிருப்பவர் சிவகங்கை இராஜசமஸ்தான வித்துவான் பொன்னுசாமி கவிராஜர். புகழ்க்கவி சீறாப்புராணீகர் மரபினராகிய மதுரை ஜில்லா கஸ்பா மேலூர் நா.க.உ. கல்விக்களஞ்சியப் புலவர், கீழ்க்கரை இயற்றமிழ் நாவலர் ம.வு.ம.செய்யிது முகம்மது அலியார், ஸ்ரீமான் காதிறுமுகியித்தீன் என்னும் எம்.எஸ்.முகியித்தீன் சேராமுதலியார் மற்றும் கீழக்கரை மகா –ரா-ரா-ஸ்ரீ ச.கா.முகம்மது ஸதக்குத்தம்பி ஆலிப்புலவரவர்கள்.

இந்நூல் கீழ்காணும் தலைப்புகளில் கும்மிப் பாடல்களாக இயற்றப்பட்டுள்ளன.

மரபுவழி,
அவுலியாக்களின் ஸியாறத்துக்குப் புறப்படுதல்,
பாதை போந்தது,
திருமயத்தூரார் விருந்தளித்தது,
காட்டுவழி போகுதல்,
எழுபிராமணப் பெண்கள் வருதல்,
பிராமணப் பெண்களோடு வழிநடந்தது,
கானகத்தியல்பு,
கள்வர்கள் வருதல்,
கற்பாறை கண்டது,
கருங்கற்பாறையில் நீரழைத்தது,
கள்வர் வளைந்தது,
கள்வரோடுபோர் புரிந்தது,
பிராமணப் பெண்கள் மூர்ச்சையடைந்தது,
நாயகர் ஷஹீதானது,
கள்வர்பெண்களுக்கு அம்புதொடுத்தது,
பிராமணப்பெண்கள் பரிதாபித்தது,
கள்வர் கண்களைக் குருடாக்கி மீட்டியது, கள்வர் பெண்களுக்கு வழிகாண்பித்தது,
ஓர் பெரியோர் கனவு கண்டது,
நாயகரையடக்கஞ் செய்தது,
நாயகர் செய்த அற்புதங்கள்,
சென்னை நவாபு தறுகா என்னும் ஆலயங்கட்டியது,
மானிபம்விட்டது,
உற்சவ வினோதம்,
கொடைநாயகன்புகழ்ச்சி,
வாழி


இந்நூலின் கடவுள் வாழ்த்து கும்மி இவ்வாறு பாடப்பட்டுள்ளது.

கடவுள் வாழ்த்து

தரு. இராகம் - நாதநாமக்கிரியை - தாளம் - ஆதி

குழிப்பு

தான தந்தனத் தானானா தன தானன தந்தனத் தன்னானா

தனதந்தன - தனதந்தன

தனதந்தன - தனதந்தன

தந்தனத் தான தனதனனா

கண்ணிகள்

சீர்தங்குங் காட்டுவாசாகிபு வாமெங்கள்

செய்யிது மேற்கும்மிப் பாட்டுரைக்கச்

சிந்தைத்தனி லெந்தத்தின

முந்தத்துவ விந்தைத்தரு

திவ்ய பராபரன் காப்பாமே. (தானன )

 

கற்பக மாகிய காட்முவா சாகிபெங்

கண்மணி மேற்கும்மிப் பாட்டுரைக்கக் -தான்ன

கஞ்சப்பத - நெஞ்சிற்றரு

மஞ்சொற்சுவை - ரஞ்சித்தொளிர்

ஹாமீம் முகம்மதுங் காப்பாமே (தானன )

 

தாரணி போற்றிய காட்டுபா வாவொலித்

தாபதர் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்

தானந்தவ- மோனங்கலை

ஞானந்திகழ் - மானம்புனை

தண்ணபூ பக்கர் பதம்புகழ்வாம் (தானன)

 

நாகை ஹமீதொலி நாயகர் கண்மணி

நாதர் செய்குயூசு பீன்றமணி

நலமுத்திரை - யதுபெற்றுயர்

பதவிக்குறு -மொலியைத்துதி

நாட்ட வுமறிரு தாட்டுணையே (தானன)

 

பாவலர் போற்றிய காட்டுவா சாகிபெம்

பாக்கியர் மேற்கும்மி பாடுதற்குப்

பாரந்தனி-லேருந்திய

வீரந்தனி-லாருங்கர

பண்புதுமானின் பதந்துணையே (தானன)

 

அட்டதிக்கும் புகழ் காட்டுவாசாகிபு

ஆண்டவர் மேற்கும்மிப் பாட்டுரைக்க

அடையார்தலை -பொடியாகவே

படிமீதினி - லிடியேறெனும்

ஆண்மை யலிப்புலி தாள்(ழ்)பணிவாம்  (தானன)

 

மாதவ மோங்கிய காட்டுபா வாசாகிபு

மங்களர் மேற்கும்மி பாடுதற்கு

வையந்தனி - லுய்யும்புகழ்

செய்யுந்திரு - மெய்யன்பொலி

மன்னர் முகிய்யித்தீன் தாள்(ழ்)பணிவாம் (தானன)





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...