முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ப.உமாபதி

 புதுக்கோட்டை எழுத்தாளர் -09

ப.உமாபதி,  (பிறப்பு - 24.11.1939 பெற்றோர் - கயி. பழனியப்பன் - காசியம்மாள்) . கரம்பக்குடி தெற்குத் தெரு.



கரம்பக்குடியில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர். முதுகலை தத்துவம்,  சமூக அறிவியல் முடித்து ஆசிரியராக பணியாற்றினார். பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றிபெற்று ஊரக வளர்ச்சித்துறையில்  அதிகாரியாகவும் பிறகு  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பணிக்காலம் 36 ஆண்டுகள்.

தமிழ் , ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதக்கூடியவர். திறனாய்வாளர், சொற்பொழிவாளர்.

ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு வழிகாட்டி நூல்களாக எழுதப்பெற்ற மூன்று நூல்களில் இடம் பெற்றிருந்தார்.

கரம்பக்குடி தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆலோசகர், கரம்பக்குடி கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் உட்பட பல அமைப்புகளில் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.

சமுதாயச் சிற்பி விருது, சிறந்த சமூக சேவை விருது உட்பட பல விருதுகள் பெற்றவர். சமீபத்தில் கரம்பக்குடி தமுஎகச கலை இரவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.

இந்தப் பூமியில் நான் கழித்த பொழுதுகள், எனும் இவரது நூல் சிறந்த தன்வரலாறு பிரிவில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்றது. இந்நூல், அவரது வாழ்க்கை வரலாற்றினூடே  புதுக்கோட்டை ஒரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு மேற்கு அரண்மனை  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகமாக மாற்றப்பட்ட கால நிகழ்வுகளைப் பேசுகிறது. இந்நூலில் புதுக்கோட்டை சமஸ்தான கடைசி மன்னர்,
புதுக்கோட்டை மாவட்ட முதல் ஆட்சியர், பற்றிய பதிவுகள் உண்டு.



புதுக்கோட்டை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதன் பிறகு, மாவட்டத்தின் தலைமை அலுவலகமாக செயல்பட மேற்கு புதிய அரண்மனையை விலைக்கு கேட்டது மாநில அரசு. தொண்ணூற்று ஒன்பது ஏக்கர் உள்ளடங்கிய அந்த அரண்மனையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்காக கொடுத்தார் ராஜகோபால தொண்டைமான்.  இந்த அரண்மனைக்கு எதிரில் சற்று தள்ளி தெற்கில் ஒரு மாளிகை இருந்தது. 

மன்னர் ராஜகோபால தொண்டைமான் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் நிகழ்ந்து ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தை மன்னராக  முடியாது, என்பதால் அவர் திருமணத்தை மறுத்திருந்தார். மேலும் புதுக்கோட்டைக்கு அவர் வந்துசெல்வதையும்  தவிர்த்திருக்கிறார்.  முனிவரைப் போல வாழ்ந்த மன்னரை மக்கள் 'ராஜரிஷி' என அழைத்திருக்கிறார்கள், இத்தகையை வரலாற்று செய்திகள் கொண்ட நூல் இது.

இதுதவிர, திருவிழா காண வந்தேன், பெண்ணே நீ படைப்பின் மகுடம், மெய்யியல் ஆய்வுகள், இறை நம்பிக்கைக்கான மெய்யியல் அடிப்படை, இறைவன் எனக்களித்த இல்லவள் ஆகிய நூல்கள் எழுதியுள்ளார்.

தற்போது மெய்யியல் மற்றும் தத்துவங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  இவர் பற்றிய விரிவான நேர்முகம் மேன்மை இதழ் 2018 பிப்ரவரி இதழில் வெளிவந்தது.

இத்தகைய சிறப்புகள் கொண்டவர் ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார். எழுத்தாளர் ப. உமாபதி அவர்களுக்கு வாழ்த்துகள்,,,,









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...