முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கு. மாரிமுத்து

 புதுக்கோட்டை எழுத்தாளர் – 213

கு. மாரிமுத்து, இலக்கியக் காவலர் என அழைக்கப்பட்டவர். ( பிறப்பு – 15.06.1957, பெற்றோர் – குட்டிச்சாமி, பாலாயி அம்மாள்) புதுக்கோட்டை காந்தி நகர், 7 ஆம் வீதி. புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பதிப்பாசிரியர், நூலாசிரியர்.

 காந்தியத்தின் அகிம்சை கோட்பாடு, பெரியாரின் பகுத்தறிவு, அம்பேத்கரரின் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக்கான போராட்ட தத்துவங்கள், மார்க்சின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத் தத்துவங்களில் தேர்ந்தவர்.

 இந்திய மனித உரிமைக் கட்சியின் அரசியல் ஆலோசராகவும், புதுக்கோட்டை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை நிறுவியர்களில் ஒருவர். மேலும் புதுக்கோட்டை பாவாணர் பாசறை நிறுவனர்களில் ஒருவர். இவர் வெண்மணிப் பதிப்பகம் நிறுவி நிறைய நூல்களை அச்சிட்டு வெளிக்கொணர்ந்தார்.
மகரந்தம் காணாத மலர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு இவரது முதல் நூலாக 1989 ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலும் வீரஞ்செறிந்த விடுதலை வீரன் மதன்லால் தில்காராவின் வீர வரலாற்றை விளக்கும் நாடகம், 47 இல் போட்ட பாதை நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. 

 இவரது பதிப்பகமான வெண்மணிப் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த நூல்களில் “ சந்தப்பா வேந்தர், புலவர் யா. வென்னரசு கவிதைகள்” மிக முக்கிய நூலாகும். இந்தப் பதிப்பகத்தின் மூலம் இலக்கியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினார். “ சந்தப்பா வேந்தர் புலவர் யா. வென்னரசு இலக்கிய விருது” தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, இலங்கை , சிங்கப்பூர் என்று பல மாநிலங்கள் நாடுகளிலிருந்து புதுக்கோட்டைக்கு வருகைத் தந்து பெற்றுள்ளார்கள். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...