முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆ.தமிழ்மணி

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 214

ஆ.தமிழ்மணி ( ஆறுமுகம் வெள்ளமணி) 30.09.1977, ராஜாளிபட்டி, விராலிமலை.  வழக்கறிஞர் பணி. 2005 முதல் எழுதிக்கொண்டிருக்கிறார். தினமணி, ஜனசக்தி, மந்திரச்சிமிழ், சங்கொலி, புதிய பார்வை  ஆகிய இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இவரது முதல் படைப்பு உறங்கும் மனசாட்சி. பல்வேறு இதழ்களில் பிரசுரமான 52 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உறங்கும் மனசாட்சியை உலுக்கும் நேரம் எனும் கட்டுரைத் தலைப்பைச் சுருக்கி இந்நூலுக்குப் பெயர்ச்சூட்டியுள்ளார். இக்கட்டுரைகள் யாவும் மனசாட்சியுடன் பேசும் கட்டுரைகள்.

மரண தண்டனை: தவிர்க்க முடியாதா? இத்தொகுப்பில் ஒரு கட்டுரை.  தண்டனை என்பது மனிதனைச் சீர்த்திருத்தி நெறிப்படுத்தவா அல்லது பழிவாங்கவா? என்கிற கேள்வியை எழுப்பி பல்லுக்குப் பல்; கைக்குக் கை என்கிற போக்கு வழி தண்டனைகள் மனித குலத்திற்கு எதிரானது என்கிறது இக்கட்டுரை .




அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி மார்சல் தனது தீர்ப்பில் எழுதுகிறார். " எப்போதும் என்ன நிகழ்கிறது என்றால் ஏழைதான், ஏமாளிதான்,  நீக்ரோதான்,  கறுப்பு மனிதன்தான், தூக்கிலிடப்படுகிறான். பணம் படைத்தவன், வெள்ளைக்காரன், தப்பித்துக்கொள்கிறான்.  உள்ளபடியான இந்தப் பாகுபாட்டை நம்மால் சகித்துக்கொள்ள முடியாது" இப்படிச் சொல்லியே நீதியரசர் மார்சல் அவர்கள் மரண தண்டனைக்கான சட்ட வழியை நீக்கம் செய்தார், என இக்கட்டுரை ஓரிடத்தில் பேசுகிறது.

"நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறைப் பொழுதும் மனித உரிமைக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது " என்கிறார் கிருஷ்ணய்யர்.

ஒரு சமூகம் நாகரிகம் அடைந்திருக்கிறதா என்பதை அளந்து பார்க்கும் கருவிகளுள் அச்சமூகம் குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி நடத்துகிறது என்பதும் ஒன்று என்கிறார் நீதியரசர் பி.என்.பகவதி

இப்படியான பதிவுகளைக் கொண்ட இக்கட்டுரை புதிய பார்வை இதழில் பிரசுரமானது.

இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் கே.ஜீவபாரதி அவர்கள், "ஓர் வழக்குரைஞரின் சமூகம் சார்ந்த வாதங்கள்!" எனும் தலைப்பில் ஜனசக்தி இதழ் செய்த இலக்கியப் பங்களிப்புகளைச் சொல்லி, நூலாசிரியரின் சமூகம் சார்ந்த வாதங்களை குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் வெளிவரும் பத்திரிகைகளில் ‘ஜனசக்தி'க்கு நீண்ட நெடிய வரலாறும் தனித்துவமும் உண்டு. பாவேந்தர் பாரதிதாசனின் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற கவிதை 'ஜனசக்தி'க்காக பாவேந்தர் எழுதி 'ஜனசக்தி'யில் வெளிவந்த கவிதையாகும். ஜனசக்தியில் வெளிவந்த 'நண்டு செய்த தொண்டு' என்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைதான் அவருக்கு திரையுலக வாய்ப்பை வாங்கித் தந்தது. ஜனசக்தியில் அலுவலகச் சிறுவனாக நுழைந்து, பிழை திருத்துபவர். ஆசிரியர் குழுவில் ஒருவர் என வளர்ந்து பிற்காலத்தில் தமிழிலக்கியத்தில் தனித்த இடத்தைப் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் த.ஜெயகாந்தன். இதுபோன்று 'ஜனசக்தி'யின் சாதனைகள் ஏராளம். இத்தகைய சாதனையாளர்களை உருவாக்கிய ஜனசக்தி இதழில் எழுதத் தொடங்கியவர் ஆ.தமிழ்மணி அவர்கள். தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் மணப்பாறை மண் பலரைத் தந்திருக்கிறது. அந்த வரிசையில் வழக்கறிஞர் தமிழ்மணியும் இணைந்திருக்கிறார் என்பதற்கு இந்நூல் சான்றாகும். 


மந்திரச்சிமிழ் பதிப்பகம்
கிழக்குத் தாம்பரம்
சென்னை -73


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...