முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டையின் தலையெழுத்தை எழுதிய நூல்கள் வரிசை - 02/02

புதுக்கோட்டை எழுத்தாளர் - 224

புதுக்கோட்டையின் தலையெழுத்தை எழுதிய நூல்கள் வரிசை - 02/02

தெப்பனா பட்டா எழுதிய ஸ்மிருதி சந்திரிகா (1150 - 1225), விக்னேஷ்வரா எழுதிய மிடாக்ஷரா இவ்விரு நூல்களும் சமஸ்தான காலத்தில் புதுக்கோட்டையை ஆட்சி செய்த நூல்களாகும்.

மிடாக்ஷரா எனும் இந்நூலை எழுதிய விக்னேஷ்வரா , இந்து சட்ட அறிஞர். 


இந்து சட்டத்தில் செல்வாக்குமிக்க சட்டங்களாக இவரது நூல் ஷரத்துகள் இருந்துள்ளன. இந்நூல் யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி பற்றிய ஆய்வு நூலாகும்.  யாஜ்ஞவல்க்ய என்பது ஒரு இந்து முனிவரின் பெயர். இவரது கருத்தாக்கமே யாஜ்ஞவல்க்ய ஸ்மிருதி. இந்நூல் பற்றி ஆய்வு செய்து எளிமைப்படுத்தப்பட்ட நூல்  மிடாக்ஷரா.


இந்நூலை எழுதிய விக்னேஷ்வரா கர்நாடகாவில் குல்பர்காவிற்கு அருகில் உள்ள மார்தூர் கிராமத்தில் பிறந்தவர்.  இவர் மேற்கு சாளுக்கியப் பேரரசின் அரசரான ஆறாம் விக்ரமாதித்யாவின் (1076-1126) அரசவையில் வாழ்ந்தவர்.

மிடாக்ஷரா என்பது பார்லிமென்ட் மூலம் உருவாக்கப்பட்ட சட்டம் அல்ல. அந்த நாட்களில் பாராளுமன்றம் என்கிற அமைப்பு இல்லை மற்றும் சட்டம் கற்றறிந்த சட்ட வல்லுனர்களின் கட்டுரைகளைக் கொண்டது. மிடாக்ஷரா இந்து சட்டத்தின் அதிகாரப்பூர்வ நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது,

இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் ஆகியவை முக்கியமான சட்டங்களில் சில.  இந்தச் சட்டங்கள்  1955 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் சுதந்திர இந்திய பாராளுமன்ற சட்டங்களால் மாற்றப்பட்டன. 

 ஸ்மிருதி சந்திரிகா,  மிடாக்ஷரா இவ்விரு நூல்களும் எழுதப்பட்ட மையம் மைசூர் ஆகும்.

புதுக்கோட்டை சமஸ்தானச் சட்டப்பேரவை மைசூர் சட்டப் பேரவையை  முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.

ஆதாரம் -
தமிழ்நாடு அரசின் தமிழரசு இதழ் (16.04.1983 )
எப்.ஆர். ஹெமிங்வே எழுதிய புதுக்கோட்டை ஸ்டேட் (1906)










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...