முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பண்டிட் ஆர். உலகநாதபிள்ளை

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 228


பண்டிட் ஆர். உலகநாதபிள்ளை, ( POET LAUREATE ) பல்கலைக் கழக வித்வான், புதுக்கோட்டை.

இவரது ஊர், பிறப்பு பற்றிய தகவல் தெரியவில்லை. புதுக்கோட்டை அன்றைய மகாராஜா கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். இந்நூலுக்கு ராணியார் பள்ளியின் தமிழ் பண்டிட் ஆர். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அணிந்துரை தந்திருப்பதும் இந்நூலை புதுக்கோட்டை கமலா ப்ரஸ் அச்சிட்டு வெளியிட்டிருப்பதையும் கொண்டு பார்க்கையில் புதுக்கோட்டையுடன் நெருங்கி தொடர்பு கொண்டிருப்பது தெரிகிறது.

இந்த நூல் வெளியான ஆண்டு – 1936. வெளியீடு -  கமலா ப்ரெஸ்,  புதுக்கோட்டை

 இவர் ஐந்து நூல்கள் எழுதியுள்ளார்

1.    திருவாலவாய் துயரறு பதிகம்

2.    புள்ளிருக்கும் வேளூர் நோயறு பதிகம்

3.    திருப்புகலூர் மிடியறு பதிகம்

4.    திருமறைக்காடு அறிவுறுபதிகம்

5.    திருத்தில்லை வீடுறுபதிகம்

இந்து ஐந்து நூல்களின் தொகுப்பு  நூல் ‘ஐங்குறு வேண்டுகோள்’

இந்நூலுக்கு நூலுக்கு நூலாசிரியர் இவ்வாறு முன்னுரை எழுதியுள்ளார்.

அடியேன் பல்வேறு வேலைகள் பார்த்துவந்த போழ்து,“ கற்றத்தாற்  சுற்றப் பட வொழுகல் செல் வந்தான், பெற்றத்தால் பெற்ற பயன்” என முற்றுணர் புலவர் கட்டளையிட்டருளியவாறு யான் திக்கற்ற நான்கு குடும்பத்தார்களைப் பாதுகாத்து வந்தபடியாலும் முறைபிறழா  நெறியின்கண் நின்றே பொருளைஈட்டி  வந்தபடியாலும் எனது வருவாயுள் ஒரு சிறிதும்  எஞ்சிற்றிலது. ஆதலின் எனக்கு உபகாரச் சம்பளம்  ( பென்ஷன்)  ஏற்பட்ட காலத்தில் செலவுக்கு மிக்க முட்டுப்பட்டுத் துயருற்று, மிடியுற்று, நோயுற்று வருந்துங்காலத்துச் செல்வச் செருக்குற்ற செல்வர்பாற் சென்று செய்யுள்யாத்து வயிறு  வளர்த்தல் பழியும் பாவமுமென அஞ்சி, எல்லாம்வல்ல இறைவனைப் பாடின், இரு செல்வங்களும்  ஒருங்கெய்தலாமென மனத்திடங்கொண்டு, இவ்வைந்து நூல்களையும் இயற்றி “ ஐங்குறு வேண்டுகோள்” எனப் பெயரிட்டனன். உடனே எனது நெடிய  துயரும் கடியமிடியும், கொடிய நோயும்  பொடி பொடியாயின. மெய்யுணர்வும் வீட்டின் விருப்பும் என்மாட்டு நாணாளும் மிக்கெழுகின்றன.

ஆனதுபற்றி, இந்நூலைக் கடவுளிடத்தன்புபூண்டு மனத்தூய்மையுடன் ஓதுபவர்கள் மேற்குறித்த பயன்கள் யாவும் ஒருங்கெய்துதல் ஒருதலையென்னும் திண்ணிய  வெண்ணத்தாலும் “ யான்பெற்ற வின்பம் பெறுக இவ்வையகம்” என ஆன்றோர் பொன்மொழி என் புன்மனத்து எழுந்தாலும் இதனை வெளிடுவான் எண்ணினேன்.

அன்னோர் பால் யானும் இத்தமிழுலகும் என்றும் நன்றி பாராட்டக் கடப்பாடுடையோமாகுன.


இங்ஙனம்

பண்டிட் ஆர். உலகநாதன்.

இந்நூலுக்கு நிதி உதவி செய்தவர் மாயவரம் இருப்புப்பாதை சதுக்கத்தில் கப்பற்றுரைமுகச் சாமான்களேற்றும் கணக்கர் ( Tranship Clerk ) டி.எம். நடேசபிள்ளையவர்கள்.
 
இந்நூலுக்கு அணிந்துரை ஆர். மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தமிழ்ப்பண்டிட், ராணியார் இலவச பெண்கள் மேனிலைப் பள்ளி, புதுக்கோட்டை. ( R. Meenaksisundram Pillai, Tamil Pandit, Ranee`s Free High School , Pudukkottai.

 நேரிசை வெண்பா

பைங்குருகு பாடுங்காப் பண்பார் புதுவையுளான்க்

ஐங்குறு வேண்டுகோ ளன்பாக – நன்குருகும்

நன்மன த்தோ டோதினர்க ணாற்பயனெய் தச்சொன்னான்

தன்ம னுலகநா தன்.

ஐந்து  சிவ தலப்பாடல்களில் திருமறைக்காடு அறிவுறுபதிகத்திற்கு செய்யுளுடன் உள்ளுரை விளக்கம் தந்துள்ளார். ஐந்தில்  திருவாலவாய் தலத்தில் தனது துயரைப் போக்கவும்,  புள்ளிருக்கும் வேளூர் தலத்தில் நோய் போக்கவும்,  திருப்புகலூர் தலத்தில் மிடிமைத் ( வறுமை) தணிக்கவும் திருமறைக் காட்டில் அறிவு கொடுக்கவும், திருத்தில்லை தலத்தில் வீடு அடையவும் பாடியுள்ளார்.




 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...