முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தயானந்த சந்திரசேகரன்

புதுக்கோட்டை எழுத்தாளர் – 230


தவத்திரு. தயானந்த சந்திரசேகரன், திலகவதியார் திருவருள் ஆதினம். திலகவதியார் திருவருள் ஆதீனச் செய்திமடல், எனும் பத்திரிகையின் ஆசிரியர். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! என்கிற வாசகத்துடன் வெளிவந்த இதழ் இது.

 இவர் முதல் பெண் ஆதீனமாக திகழ்ந்த திலகவதியார் திருவருள் ஆதீனம் அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவியின் வளர்ப்பு பிள்ளையாவார். தனது அக்கா பேரனான இவர், அன்னையிடத்தில் நான்கு வயதிலிருந்து வளர்ந்து வந்தவர். இளம் நிர்வாகவியல்,கணினி முதுகலை பட்டம் பெற்றவர்.




1998 ஆம் ஆண்டு அன்னையார் இறைவனது நிழலடி அடைந்த பிறகு திலகவதியார் திருவருள் ஆதீனம் பொறுப்பேற்று சிறப்புடன் நடத்தி வருகிறார். அன்னையின் பெயரால் நினைவு பொது நூலகம் நடத்தி வரும் இவர் ஆண்டுதோறும் முதல் பெண் மருத்துவர் டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த நாள் விழாவில் ஏழைப் பெண்களுக்கு உதவி செய்துவருகிறார்.

இவர் எழுதிய நூல்கள்

மாதர்குல மாணிக்கம் - டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார்.

சிலம்பு ஒலிக்கும் சிந்தனைகள்

திருமுறைகளில் கலைகள், சமுதாயம், கோயில்கள்

ஒரு பெண் துறவியின் சமய வாழ்வும் சமுதாய வாழ்வும்

இவர் பதிப்பாசிரியராக இருந்து அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி நிறுவிய திலகவதியார் திருவருள் ஆதீனம் வெளியீடாக கொண்டுவந்திருக்கும் நூல், “பத்மபூஷன் டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் மாதர்குல மாணிக்கம்” இந்நூல் டாக்டர் முத்துலெட்சுமியின் வாழ்க்கை வரலாறு.

இந்நூலுக்கு பதிப்புரையும் நன்றியுரையும் இவ்வாறு எழுதியுள்ளார்.

பெண்களறிவை வளர்த்தால் – வையம்

பேதமை யற்றிடுங் காணீர்

என்ற முண்டாசுக் கவிஞன் பாரதியின் வரிகள் எவ்வளவு உண்மை என்பதை அனுபவமாக உணர்ந்த பிறகுதான் தெரிகிறது. ஆம்! பெண்கள் இன்று வளர்ந்துள்ள நிலையினை கொண்டே நாம் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் பல நூற்றாண்டுகளாக இந்த ஆணாதிக்க சமுதாயம் பெண்களை அடிமைகளாகவும் போதைப் பொருளாகவும் வைத்து வந்துள்ளதை வரலாறுகள் பறைசாற்றுகின்றன.. பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்று நாம் படித்தாலும் ஆணுக்கு ஓர் நீதி பெண்ணுக்கு ஓர் நீதி என்ற நிலை.

பெண்ணினத்தைப் போற்ற வேண்டும், அதனை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று அடித்தளமிட்டு முழக்கமிட்டவர்கள் மகாகவி பாரதியார், தந்தை பெரியார் போன்றவர்கள்.  இந்த நிலையில் சில அரிதான பெண்கள் அவதாரம் எடுக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. தமிழகத்தில் பிறந்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக உருவான  டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி முன்மாதிரியான பெண்மணி  ஆவார்.

இந்நூல் முத்துலெட்சுமியின் வாழ்க்கை வரலாறு.  முத்துலெட்சுமி ரெட்டி 1886 ஆம் ஆண்டு ஜுலை 30 ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தையார் நாராயணசாமி, தாயார் – சந்திராம்மாள். மூன்று பெண் குழந்தைகளில் முதல் பெண் முத்துலெட்சுமி. இவரது ஆசிரியர் திரு பாலையா என்பவரின் விடா முயற்சியின் பேரால் பள்ளி படிப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் சேர்வதற்கு மன்னரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்தது. முத்துலெட்சுமியின் தந்தையார் கல்லூரியின் டைரக்டர் என்பதால் அக்கல்லூரியில் படிக்க மன்னர் இசைவு தெரிவித்தார். கல்லூரி இன்டர்மீடியேட் தேர்வில் முதல் மாணவியாகத் தேர்ச்சிப் பெற்றார். பிறகு 1907 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவியராகச் சேர்ந்தார். அப்போது மருத்துவப் படிப்பு M.B C.M என்று அழைக்கப்பட்டது.

இப்படியான பல தகவல்கள் கொண்ட இந்நூலில் இடம்பெற்றுள்ள முக்கியமான ஒரு செய்தி, இந்திய மாதர் சங்கம் டாக்டர் முத்துலெட்சுமியின் பெயரைச் சட்ட மேலவை உறுப்பினராக முன்மொழிய, அப்பதவிக்கு அவர் தேர்வாகிறார். பிறகு சட்ட மன்றத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  அந்தக் காலக்கட்டத்தில் மகாத்மா காந்தியடிகள் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதற்காக ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு ஏரவடா சிறையில் அடைக்கப்படுகிறார். இந்தக் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் முத்துலெட்சுமி அவர்கள் தனது சட்டமேலவைப் பதவியை ராஜினாமா செய்து ஆளுநருக்கு கடிதம் எழுதுகிறார். அந்தப் பதவி விலகல் கடிதம் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.




 இந்நூல் வெளியீடு –
தவத்திரு. தயானந்த சந்திரசேகரன்,
திலகவதியார் திருவருள் ஆதீனம்
1120, மச்சுவாடி, புதுக்கோட்டை.

குறிப்பு – டாக்டர் முத்துலெட்சுமி அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய நூல்கள், இலக்கிய, மருத்துவ, அரசியல் பங்களிப்பு குறித்தும் அவரது சுயசரிதை குறித்தும் தனிப் பதிவாக எழுதியுள்ளேன்.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...