முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செம்பை மணவாளன்

 புதுக்கோட்டை எழுத்தாளர்- 40

செம்பை மணவாளன், ( பிறப்பு - 16
03.1945; பெற்றோர் - ஆசி.கோவிந்தசாமி - மாரியாயி). இவரது இயற்பெயர் பிச்சைமுத்து. பிறப்பு - செம்பாட்டூர். மச்சுவாடியில் வசித்து வருகிறார். கர்மவீரர் காமராசர் ஆட்சிக்காலத்தில் இரவு பள்ளிக்கூடத்தில் படித்தவர். கட்டுமானக் கலைஞர். தியாகி ஜீவா, பாலன், தோழர் நல்லக்கண்ணு, எழுத்தாளர் பொன்னீலன்,..இவர்களுடன் நெருங்கிய தோழமை கொண்டவர்.

சிறுகதை, கவிதை, இசைப்பாடல்கள் என பல தளங்களில் இயங்கக்கூடியவர். இந்திய நதிநீர் பிரச்சனைப் பற்றி ஊர் ஊராக நிகழ்ச்சிகள் நடத்தி மக்களைத் தூண்டியவர். கோபுரம் கட்டும் கலை நிபுணர். இவரது தாத்தா சமஸ்தான புதுக்கோட்டையில் வழக்கறிஞராக இருந்திருக்கிறார்.

பொதுவுடைமை போராளி. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற  மாவட்டச் செயலாளராக பன்னிரெண்டு ஆண்டுகள் செயலாற்றியவர்.  தற்போது அப்பெருமன்றத்தின் மாநிலக் குழு உறுப்பினர். கவிஞர்,  பாடகர், சிறுகதையாளர் எனப் பன்முகத்தவர்.

தினமணி மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இரு முறை பரிசுகள் பெற்றவர். கோவை லில்லி தெய்வ சிகாமணி நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை முதல் பரிசு பெற்றது.

பொது சேவையில் நாட்டம் கொண்டவர். இவரது பொதுச்சேவையைப் பாராட்டி  மேனாள் குடியரசு தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் இருமுறை கடிதம் எழுதி பாராட்டியுள்ளார்.

தவம், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.   மேலும் தவம் என்கிற சிறுகதை கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பாடமாக இடம்பெற்றது.

இவரது பாத்திரப் படைப்புகளில் உப்புக்காரச்செட்டியார் பிரசித்திபெற்ற கதாபாத்திரம்.  மகளுக்கு சடங்குச் சுற்ற உறவினர்கள் வீட்டுக்கு வரவிருக்க, இவர் உப்பு விற்க வண்டியைப் பூட்டிக்கொண்டு வியாபாரத்திற்குக் கிளம்பிவிடுகிறார்.  வீடு திரும்புகையில்  ஒரு கிணற்றடியில்  குளிக்கலாமென வேட்டியை அவிழ்த்து, குளித்து கரை ஏறுகையில் ஓர் எருமை வேட்டியைத் தின்றுவிடுகிறது. அதன்பிறகு எப்பொழுது இருட்டுமென கிணற்றடியில் நிர்வாணமாக மறைந்திருக்கிறார். எல்லோரும் ஒளிக்காகத் தவமிருப்பர். நமது செட்டியாரோ இருளுக்காகத் தவமிருந்தார்" என்பதாக அக்கதையை முடித்திருப்பார்.

புதுக்கோட்டையின் செம்மண் மொழியில் விவசாயக் குடிகளின் நசிந்த வாழ்க்கையை மனதை உருக்கும் சித்திரங்களாகக் காட்சிப்படுத்துவது செம்பை மணவாளனின் தனித்தன்மையாகும்.  " கரண்டியையும் பிடித்துக்கொண்டு பேனாப் பிடிப்பவன் உலகில் நீ ஒருவன் தானப்பா " எனக் கலைமாமணி தலைமை ஸ்தபதி திரு. எம்.எஸ். சிவப்பிரகாசம் பாராட்டியதை தனது வாழ்நாள் பெருமையாகக் கருதி வருகிறார்.

தனிப்பாடல்களுக்குப் பெயர்ப்போனவர். பல பாடல்கள் இயற்றி மெட்டமைத்து பாடியிருக்கிறார். ஈழம் போராட்டத்தின் போது இவர் எழுதிய பாடிய பாடல் இந்தியத் தமிழர்களை எழுச்சியூட்டிது.

அப்பாடல் இது.


இலங்கைத் தமிழர்களே எங்கள் இன்னுயிர் சொந்தங்களே (2)

இலங்கையின் மண்ணினைப் பொன்னாக்கித் தந்ததும் எந்தயர் திருக்கரங்கள்


அந்தத் தேயிலைத் தோட்டத்தைச் செழிப்புற வளர்த்ததும் எங்கள்
மங்கையர் வளைக்கரங்கள்  ( இலங்கை)


கற்பின் கனலிகள் செல்வக் குழந்தைகள் கதறலும் கேட்கலையோ- எங்கள்

காளையர் இரத்தமும் கடலினில் பாய்வதைக் கண்கொண்டு பார்க்கலையோ ( இலங்கை)

நித்தம் நித்தம் அங்கு செத்து மடிகிறார் எங்களின் மீனவர்கள்
எங்கள் புத்தனின் போர்வையில் இரத்தம் குடித்திடும் பொல்லாத வல்லூறுகள்
(இலங்கை)

ஒன்று இரண்டல்ல இருபத்து ஐந்து வருடம் ஓடி மறைந்தது காண்

இனி உங்கள் விழிநீரைத் துடைத்திடும் நாள்வரை ஓய்ந்திடோம் நாங்களும்தான்
தலைச் சாய்ந்திடோம்  நாங்களும்தான்!
(இலங்கை)

இப்பாடல்  2003 ஆம் ஆண்டு தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்களுக்கான  உண்ணாவிரதப் போராட்டத்தில்  பாடப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் என்சிபிஎச் இணைந்து வழங்கும்  வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கிறார். பல்வேறு சாதனை விருதுகளுக்குச் சொந்தக்காரரான இவர்  புதுக்கோட்டை ஆறாவது புத்தகக் கண்காட்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...