முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்மணி ராஜாமுகமது

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 225


கண்மணி ராஜாமுகமது,  09.05.1963, (பெற்றோர் - முகமது சுல்தான், பாத்துமுத்து), அம்மன் கோவில் வீதி, பொன்னமராவதியில் வசித்து வருகிறார். இவரது பூர்வீகம் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கம்பூர் கிராமம்.




திரைப்படத் துறையில் உதவி இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார். 'மௌன ஊஞ்சல்' எனும் தொலைக்காட்சி தொடர் சன் டிவிக்காக இயக்கி உள்ளார். கவிஞர். சிறுகதையாளர். கன்னடம், மலையாளம் திரைப்படங்களில் கதை, வசனக்கர்த்தா.   திரைப்பட பாடலாசிரியர்.  பொன்னமராவதியை மையமாகக் கொண்டு கண்மணி  பதிப்பகம் நடத்துகிறார்.

கவிதையில் தொடங்கிய இவரது இலக்கியப் பயணம் சிறுகதையாக படர்கிறது.  ஐந்து நூல்கள் எழுதியுள்ளார்.
காகிதத்தில் காதல் செய்து,
பால்யகால சொர்க்கவெளி,
மலர்க் கிரீடம்
கண்மணி ராஜாமுகமது கவிதைகள்
இவை நான்கும் கவிதைத் தொகுப்புகள்.

நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை

ஒரு சிறுகதைத் தொகுப்பு என ஐந்து நூல்கள். இலக்கியத்திற்காக திருப்பூர் இலக்கிய விருது, இலக்கியச் சுடர் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.

நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை எனும் இத்தொகுப்பு பதினான்கு கதைகள் கொண்டது. விவசாயம், காதல், மதம், சமூக உறவு என்று வட்டார மொழியாடலில் கதைகள் பேசுகின்றன.
இத்தொகுப்பில் ' சாமியாடி பெரியப்பன்'  என்றொரு சிறுகதை.

ஊர்ச்சாமி ஆடுகிறவராக இருக்கிறார் சாமியாடி பெரியப்பன். இவர்  மூக்குறிஞ்சி என்கிறவனின் அப்பன். இவர் வயோதிகத்தால் படுக்கையில் விழுந்துவிடுகிறார். அவரைச் சுற்றி இக்கதை நகர்கிறது.

இவருக்கும் முன்பு ஊர்குலக் கோயிலில் பொட்டுக்காரக் கிழவன் அப்படினு ஒரு கிழவன். அவர் அம்மன் சாமி ஆடுகிறார். அவர் இறந்துவிட, அவர் மீது அணைந்து ஆடிய சாமி அடுத்து யார் மீது ஆடப்போகிறது என்று தேடுகிறார்கள். பல ஆண்டுகள் கடந்து மூக்குறிஞ்சி அப்பன் மீது ஆடுகிறது. அதன்பிறகு வருஷா வருஷம் விடாது திருவிழா நடக்கிறது.

யாருக்கு முடியவில்லையென்றாலும் அவரிடம் விபூதி கேட்டு வருகிறார்கள் " அரும்பு உதிராமக் காப்பாத்துறேண்டா மக்க" என்று விபூதி கொடுக்கிறார்.

அந்த மூக்குறிஞ்சி அப்பனின் உசிர் ஒரு மாதத்திற்கும் மேலாக இழுத்துக்கொண்டிருக்கிறது. வாய் லேசாகத் திறந்திருக்க நீண்ட இடைவெளியில் மூச்சு வந்து போகிறது. 

" எப்படித் திரிஞ்ச அப்பன்.இப்படி மொடங்கிக் கிடக்கே!" குடும்பம் அழுகிறது. மந்திரிச்ச கயிறு, விபூதியை அவர் மீது தடவிவிடுகிறார்கள்.

" போற உசிரு பொட்டுனு போகாம,  பொழப்பைக் கெடுக்குதே" ஊரார்கள் பேசிக்கொள்கிறார்கள்.

ஊர்க்காரர்கள்  மூக்குறிஞ்சியை தனியே அழைத்துப்போய் சொல்கிறார்கள். " அதாம்ப்பா! எல்லாருமாச் சேந்து நல்லபடியா ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்.  ஊரு அடங்கினப் பின்னாடி கமுக்கமா...அப்பனுக்கு ஒடம்பு பூராவும் நல்லா எண்ணெய்த் தேச்சு, பச்சைத் தண்ணியில தலை குளிப்பாட்டி போட்டுடு...காரியம் நல்லபடியா முடிஞ்சுடும் ".

மலங்க மலங்க முழிக்கிறான் மூக்குறிஞ்சி.

" நீ ஒண்ணும் கவலைப்படாதே... எல்லாத்தையும் ஊருப் பொதுச் செலவுல எழுதிருவோம்...அவருக்குச் செய்யாம ஆருக்கப்பா செய்யுறது..."

பெற்ற அப்பனைக் கொல்வதா, முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறான் மூக்குறிஞ்சி.

கதையாசிரியர் கண்மணி ராஜாமுகமது கதையை இவ்வாறு முடிக்கிறார். "எல்லாத்தையும் கவனமா பாத்துக்கிட்டிருந்த நெலாவுக்கு நெஞ்சு பொறுக்கலை.  மனுஷப் பயலோட கிருத்துவத்தை நெனைச்சுப் பயந்து மேகத்தை இழுத்து ஒரேயடியாக போத்திக்கிச்சு "


கண்மணி பதிப்பகம்
6C, அம்மன் கோவில் வீதி
( புதிய பள்ளிவாசல் எதிரில் )
பொன்னமராவதி - 622407



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...