முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை வரலாற்றை நீண்ட வரலாறாக எழுதியவர்

புதுக்கோட்டையை மிக நீண்ட வரலாறாக எழுதியவர்

கே.ஆர். வெங்கடராம ஐயர், B.A,L.T,M.R.A.S,

இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியுடன் ஒருங்கிணைந்திருந்த  மன்னர் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். ஆண்டு -1935.

புதுக்கோட்டை வரலாறு பலரால் எழுதப்பட்டிருக்கிறது. நீண்ட வரலாறாக எழுதியவர் கே.ஆர். வெங்கடராம ஐயர்.
இவர் எழுதிய வரலாறு  மூன்று பெரும் தொகுதிகளாக வெளிவந்தன. மொத்தப் பக்கங்கள் -1416.

1.   A MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I )

2.   MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME II PART I )

3.   MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME II PART II )

இம்மூன்று நூல்களும் வெவ்வேறு காலத்தில் வெளிவந்தன

தொகுதி - 1

A MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I )

இந்தப் பாகத்தின் பக்கங்கள் - 518.

இரண்டாவது மற்றும் திருத்தப்பட்ட பதிப்பு - 1938

மறுபதிப்பு -2004.

அச்சு - பிரகதம்பா ஸ்டேட் பிரஸ், புதுக்கோட்டை -1938.

இந்நூலுக்கு முன்னுரை  எம்.ஏ. சித்திக் ஐ.ஏ.எஸ் அவர்கள். இவர் சென்னை எழும்பூர் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்  அருங்காட்சியகத் துறை இயக்குநர்.


முன்னுரை

புதுக்கோட்டை சமஸ்தானம், மாநிலத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஆர்வமாக இருந்தது. இச்சமஸ்தானத்தில் அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறை 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நீட்சியாக  சமஸ்தானத்தின் வரலாறு பற்றிய புத்தகங்கள் வெளியிட முன்வந்தது. இதன்படி  புதுக்கோட்டை சமஸ்தான கையேட்டின் முதல் பதிப்பு, தொகுதி I 1920 ஆம் ஆண்டும் இதன்  திருத்தப்பட்ட பதிப்பு 1938 ஆம் ஆண்டும் வெளியானது.  இந்த நூல் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது.

இந்நூல் எழுத துணைப் புரிந்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் திரு. கே. வெங்கடரங்கம் ராஜூ முக்கியமானவர். இவர் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராக இருந்தவர். அடுத்தவர் திரு. என்.பி. சுவாமிநாத ஐயர். இவர் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வாளர். கே.ஆர்.சீனிவாச ஐயர், டி.எஸ். சுந்தரம் ஐயர் இருவரும்  புதுக்கோட்டை சமஸ்தான அச்சகத்துறையின் கண்காணிப்பாளராக இருந்தவர்கள்.  இந்நூலுக்குத் தேவையான புகைப்படங்கள் கொடுத்து உதவியவர் திரு. எல்.கணேச சர்மா அவர்கள். இவர் பாரத் பெயரில் ஸ்டியோ நடத்தியவர் .  இவர்கள் தவிர திரு. ஸ்டெல்லா கரம்ரிச் குறிப்பிடப்படுகிறார். இவர் லண்டன் யுனிவர்சிட்டி ஆலோசனையாளர். புதுக்கோட்டை பற்றிய ஆவணக்குறிப்புகள் லண்டன் நூலகத்திலிருந்து  பிரதியெடுத்து அனுப்பி உதவியவர்.





இந்நூல் இருபத்து இரண்டு  அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

அத்தியாயம் - 1, இயற்கை அமைப்புகள்,புவியியல், வானிலையியல்

அத்தியாயம் -2 , தாவரங்கள், விலங்குகள்

அத்தியாயம் -3, மக்கள், கலாச்சாரம், மதம், சாதிகள் மற்றும் பழங்குடியினர்.

அத்தியாயம் - 4, வேளாண்மை

அத்தியாயம் - 5, பாசனம் மற்றும் ஆறுகள்

அத்தியாயம் - 6,  வனம் மற்றும் பாதுகாப்பு

அத்தியாயம் - 7 , தொழில் மற்றும் ஏற்றுமதி

அத்தியாயம்  -8,  தகவல் தொலைத்தொடர்பு

அத்தியாயம்  -9 ,மக்கள் நலம்  மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம்

அத்தியாயம்  -10, கல்வி

அத்தியாயம்  -11 , கூட்டுறவுத் துறை

அத்தியாயம்  -12, உள்ளாட்சித்துறை, கிராமம்- நகரம், பஞ்சாயத்து தாலுகாக்கள்

அத்தியாயம்  -13, நில வருவாய்த்துறை

அத்தியாயம் -14, உப்பு, அப்காரி, வரித்துறை

அத்தியாயம்  -15, சட்டச்சபை

அத்தியாயம்  -16, நீதித்துறை, சட்டம், கைதி, சிறை

அத்தியாயம் - 17, அரண்மனை, கட்டிடங்கள், அமைவிடங்கள்

அத்தியாயம் -18, தர்பார் மற்றும் அலுவலகங்கள்

அத்தியாயம் - 19, தேவஸ்தானம் மற்றும் தொண்டு நிறுவனங்கள்

அத்தியாயம்  -20, இராணுவம்

அத்தியாயம்  -21 , வணிகம்

அத்தியாயம்  -22, அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறை

இத்தொகுப்பில்  புதுக்கோட்டையின் முதல் இரண்டு நூலகம் குறித்த பதிவு இடம் பெற்றுள்ளது.

1911 ஆம் ஆண்டுக்கும் முன்பு புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இரண்டு நூலகங்கள் இருந்துள்ளன்.

1.தமிழ் நூலகம்

2.சரஸ்வதி மஹால்.

தமிழ் நூலகம்

மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி புதுக்கோட்டை நகர மையத்தில் 1857 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கும் முன்பு அந்த இடத்தில் சிறியளவில் தமிழ் நூலகம் இருந்தது. கல்லூரி தொடங்கப்பட்டவுடன் அந்த நூலகம் கல்லூரியுடன் இணைக்கப்பட்டது.


சரஸ்வதி மஹால் எனும் இந்நூலகம்
வாணி விலாசா வேத சாஸ்திர பாடசாலை எனும் சமஸ்கிருத பள்ளி 1894 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது.  இந்தப் பள்ளி மனோவிருத்தி ஜாகீர் சர்ப்ளஸ் சத்திரம் வழங்கிய நிதி உதவியின் பேரால் தொடங்கப்பட்டது. இப்பள்ளி முதலில் திருக்கோகர்ணத்தில் தொடங்கப்ட்டது. இங்குதான் சரஸ்வதி மகால் எனும் நூலகம் இயங்கியது. இது அரண்மனை நூல்கம் என்றும் அழைக்கப்பட்டது. இப்பள்ளி 1911 ஆம் ஆண்டு பழைய அரண்மையையொட்டி மாற்றப்பட்டது. அதையொட்டி  இந்நூலகமும் மாற்றப்பட்டது.


புதுக்கோட்டையின் முதல் பொதுமக்கள் நூலகம்

1911 ஆம் ஆண்டு "யூனியன் கிளப்" தொண்டு நிறுவனம் நகர் மன்றத்தில் ஒரு நூலகத்தைத் திறந்தது. அதன் பெயர் யூனியன் கிளப் நூலகம்.  இதில் அமர்ந்து வாசிக்கக்கூடிய வசதிகள் இருந்திருக்கவில்லை. பிறகு இந்த கிளப் அதாவது 1918 ஆம் ஆண்டு வாசிப்பதற்கென்று ஒரு தனி அறை அமைத்தது.  மேலும் இந்த அமைப்பு நூலக அவசியத்தை உணர்த்தும் பொருட்டும் வாசிப்பை பரவலாக்கும் பொருட்டும் நூலக மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்களில் ஒன்று புதுக்கோட்டை நகரத்தில் ஒரு பொது நூலகம் தொடங்கப்பட வேண்டும், என்பது.

பழைய அரண்மனையில் “சாரதா நூலகம்" என்கிற பெயரில் ஒரு நூலகம் தொடங்கப்பட்டது. இதில் 3,400 நூல்கள் இடம்பெற்றன. இதிலிருந்து 600 நூல்கள் பத்து பெட்டிகள் மூலம் இடைநிலை பள்ளிகளின் வாசிப்புச் சுற்றுக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறு அனுப்பப்பட்ட நூல்கள் நடமாடும் நூலகம் என்றழைக்கப்பட்டன. இந்த நடமாடும் நூலகத்தின் தொடர்ச்சியாக  ராணி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒரு நூலகம் தொடங்கப்பட்டது. இதுதவிர புதுக்கோட்டையின் மூன்று தாலுகாக்களான ஆலங்குடி, திருமயம், குளத்தூர் ஊர்களில்  தலா ஒரு நூலகம் திறக்கப்பட்டன.  




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...