முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஷேக்ஸ்பியர் வரியைக் கொண்டு எழுதப்பட்ட புதுக்கோட்டை வரலாறு

புதுக்கோட்டையை எழுதிய நூல்கள் வரிசை -04

ஷேக்ஸ்பியர் இயற்றிய நாடகங்களில் ஒன்று ரிச்சர்ட் -II. அந்த நாடகத்தில் ஓரிடம்,


தயவுசெய்து நாம் அனைவரும் தரையில் அமர்ந்து அரசர்களின் சோகமான மரணங்களை குறித்து பேசுவோம்.

வஞ்சகத்தால் வீழ்ந்தார்கள்,
வாளினால் போரில் மாண்டார்கள். துரோகம் செய்து அவர்கள் கொன்றவர்களின் ஆவியால் அலைக்கழிக்கப்பட்டார்கள்.
சிலர் மனைவியால் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்,

இன்னும் சிலரோ தூங்கும் போது கொல்லப்பட்டார்கள்.
அனைவரும் மாண்டு போனார்கள்.

ஒரு மன்னனின் தலையை அலங்கரிக்கும் வெற்று மணிமகுடம்
மரணத்தையும் அவன் அரசவைக்கு கூட்டி வரும்.
மரணம் அரசவையில் அமர்ந்து மன்னனின்  ஜம்பத்தை எள்ளி நகையாடும்.

நாடகத்தின் சில காட்சிகளுக்கு மூச்சு விட அனுமதிக்கும்,
ராஜ்ஜியங்களைக் கைப்பற்று,
பயத்தை பிறருக்கு பரிசாக்கு, 

உன் தோற்றத்தால் பிறருக்கு மரண பயத்தை கொடு என்று அகந்தையினாலும் கர்வத்தினாலும் ஒரு அரசனுக்கு போதை ஏற்றும்.

"ஏதோ, இவனின் ஆவியை பாதுகாக்கும் சுவராகிய தசை மட்டும் வெண்கலத்தால் ஆனது போல எண்ணி வாழ்கிறானே" என்று எள்ளி நகையாடும்.

அந்தோ கடைசியில் வந்தது கோட்டைச்சுவர்களைத் துளைத்து ஊசி போல் மரணம்.

அந்த மரணம் சொன்னது
சென்று வாருங்கள் மாமன்னரே என்று.

இதன் ஆங்கில வடிவம் இது :

For God's sake let us sit upon the ground And tell sad stories of the death of kings:

How some have been deposed, some slain in war, Some haunted by the ghosts they have deposed, Some poisoned by their wives, some sleeping killed, All murdered- for within the hollow crown That rounds the mortal temples of a king Keeps Death his court, and there the antic sits, Scoffing his state and grinning at his pomp, Allowing him a breath, a little scene, To monarchize, be feared, and kill with looks, Infusing him with self and vain conceit, As if this flesh which walls about our life Were brass impregnable; and, humoured thus, Comes at the last, and with a little pin Bores through his castle wall, and farewell king!

Shakespeare, Richard II


நிக்கோலஸ் பி. டிர்க்ஸ்,

இவர் மனிதவளம் மற்றும் சமூக அறிவியல் துறை வல்லுநர். கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி துறை பேராசிரியர். இவர் 1975 -77 கால இடைவெளியில் கலாச்சார ரீதியாக இந்தியா - இங்கிலாந்து  நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை ஆய்வுசெய்ய  இந்தியா வந்தார். அதற்காக அவர் தேர்வு செய்த இடம் புதுக்கோட்டை.

முதல் கட்ட ஆய்வு முடித்துக்கொண்டு இங்கிலாந்து சென்ற அவர், அமெரிக்கன் இன்ஸ்டியூட் ஆப் இண்டியனின் நிதி உதவியின் பேரால் 1981 - 82 ஆம் ஆண்டு கால இடைவெளியில்  மறுமுறை புதுக்கோட்டை வந்து, இரண்டு ஆண்டுகள் இங்கேயே  தங்கி இந்நூலை எழுதினார்.

பி.எம்.சுப்பிரமணிய ஐயர்

புதுக்கோட்டை வந்த டிரிக்ஸ் மன்னரின் அரண்மனையில் தங்கினார். அவரைப் புதுக்கோட்டை முழுவதும் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி கள விளக்காளராக பிஎம்எஸ்  என்கிற சுப்பிரமணிய ஐயர் நியமிக்கப்பட்டார். இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஷேக்ஸ்பியர் மற்றும் பிரிட்டிஷ் வரலாறு பாடங்களைக் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றியவர். பிறகு இவர் புதுக்கோட்டை தர்பாரில் தலைமை கணக்கராக பணியாற்றி ஓய்வு பெற்றார். மேலும் இவர் 1944 ஆம் ஆண்டு வாக்கில் புதுக்கோட்டையின் கடைசி கால திவானாக இருந்த அலெக்ஸாண்டர் டாட்டன்ஹாமின் ஆலோசகராகவும் நண்பராகவும் இருந்தவர்.

நிக்கோலஸ் பி. டிரிக்ஸ் என்பவருக்கு பிஎம்எஸ் உதவியாக நியமிக்கப்பட்டதும் அவர் டிரிக்ஸை அழைத்துக்கொண்டு புதுக்கோட்டையின் முக்கிய இடங்களைச் சுற்றிக்காட்டி வரலாற்றுடன் தொடர்புடைய இடங்களைச் சுற்றிக் காட்டினார். அவ்வபோது ஷேக்ஸ்பியரின் தத்துவ வார்த்தைகளைக் கூறி உரையாடினார்.

அவரது உதவிக்குக் கைமாறாக பணம் உதவி செய்தார் ட்ரிக்ஸ்.  பிஎம்எஸ் அதை ஏற்கவில்லை. அறிவை விற்பதை நான் கீழ்ச்செயலாகக் கருதுகிறேன் என்று கூறி மறுத்துவிட்டார்.

பிஎம்எஸ் வயோதிகத்தால் அவருக்குப் பார்வை அவ்வளவாக தெரியவில்லை. இதனால் ஓலைச்சுவடி, கல்வெட்டுக் குறிப்புகளை அவரால் வாசித்து விளக்கமுடியவில்லை.  அவருக்குப் பதிலாக வேறொரு நபரைப் வைத்துக்கொள்ள விரும்பினார் டிரிக்ஸ்.  ஆனால் பிஎம்எஸ் விடுவதாக இல்லை. புதுக்கோட்டை மீது அவருக்கிருந்த அறிவு,ஆர்வத்தால் டிரிக்ஸ்க்குத் தொடர்ந்து கருத்தாளராக இருந்தார்.
பி.எம். சுப்பிரமணிய ஐயர் மீது மன்னர் பெருமதிப்பு கொண்டிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு.  திருச்சிராப்பள்ளியில் ரயில்வே துறையினர்  நிலம் கையகப்படுத்துகிறார்கள். அப்படியாக கையகப்படுத்தும் நிலங்களில் மன்னர் குடும்பத்திற்குரிய நிலங்கள் எதுவும் இருக்கிறதா,  என நிலவரைபடத்தைப் பார்த்து அறிந்துசொல்ல சுப்பிரமணிய ஐயரைக் கேட்டுக்கொள்கிறார். அவரும் மன்னர்க்குரிய மொத்த நிலங்கள், இடங்கள்,...பற்றி ஆராய்ந்து விளக்குகிறார். அதற்கான ஊதியமாக தன் மேசையிலிருந்த பணக்கட்டில் நூறு ரூபாய் எடுத்துக்கொள்ளச் சொல்லி கேட்டுக்கொள்கிறார். பிஎம்எஸ் அந்த ஊதியத்தை மறுத்துவிடுகிறார். "நீங்களோ மன்னர். நானோ ஊழியன்.  நீங்கள் சொல்லும் வேலையை நான் செய்ய வேண்டியது கடமை. அதற்கேன் கூலி "

" நானொன்றும் இப்பொழுது மன்னனில்லை.  இப்பொழுது இங்கே மன்னராட்சியும் இல்லை. பிறகு ஏன் இன்னும் என்னை மன்னர் என்று சொல்கிறீர்கள்?" எனக் கேட்கிறார் மன்னர்.

அதற்கு சுப்பிரமணிய ஐயர்,  ஷேக்ஸ்பியர் எழுதிய ரிச்சர்ட்-II நாடகத்திலிருந்து ஒரு வாசகத்தைச் சொல்கிறார்.  " Not all the waters of the rough rude sea can wash away the balm from an anointed king".

இந்த வாசகம் பைபிள் சாராம்சத்தைக் கொண்டது.

[1]கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

[2]அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.

[3]அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

[4]நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

[5]என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

[6]என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.


ஐந்தாவது வாசகத்தை ஆதாரமாகக் கொண்ட ஷேக்ஸ்பியர்  வரியை இவ்வாறு புரிந்துகொள்ளலாம். " ஒருவர் தலையில் தைலம் வைத்து நீரே எங்களுக்கான மன்னர் என்று அறிவித்து ஆசி வழங்கிவிட்டால் கடலால் கூட மன்னர் பதவியைப் பறிக்க முடியாது "

இதைத்தான் சுப்பிரமணிய ஐயர் இவ்வாறு சொல்கிறார்.  " இப்போது நீங்கள் மன்னரில்லாமல் இருக்கலாம். மன்னராக முடிசூடப்பட்டவர் நீங்கள். இனி நீங்கள் மன்னரில்லை என்று சொன்னாலும் நீங்கள் மன்னர்தான் ".

மன்னருக்கும் தனக்குமிடையே நடந்தேறிய உரையாடலை டிரிக்ஸிடம் சொல்கிறார் சுப்பிரமணிய ஐயர். இதைக் கேட்டு ரசித்த டிரிக்ஸ்,  " நான் எழுதுகிற இந்த புதுக்கோட்டை இனவரையியல் நூலுக்கு ஷேக்ஸ்பியரின் ரிச்சர்ட் - II நாடகத்தின் வரியிலிருந்து பெயரிடுகிறேன் " என்றார். அப்படியாகச் சூட்டப்பட்ட தலைப்பு " THE HOLLOW CROWN " Ethnohistory of an Indian Kingdom.

இந்நூல் 1987 ஆம் ஆண்டு வெளியானது. The hollow Crown என்பதற்கு வெற்று மகுடம்  என்று பொருள். அதாவது அதிகாரமற்ற அதிகாரம்.




இந்நூல் ஆறு அத்தியாயங்கள் கொண்டது. இந்நூல் பெரும்பகுதி மன்னர், கள்ளர், வகையறாக்கள், இனம், பரவல் பற்றி பேசுகிறது.

பகுதி - 1 அறிமுகம்
(இந்தியாவில் மாநிலம் மற்றும் சமூகம் பற்றிய ஆய்வு)

பகுதி - 2 வரலாறு மற்றும் இன வரலாறு
(பழைய ஆட்சியின் வரலாற்று சூழல்,
அரசாட்சியின் சொற்பொழிவு: பழைய ஆட்சியில் அதிகாரத்தின் பிரதிநிதித்துவங்கள்)

பகுதி -  3 பழைய ஆட்சியில் ஒரு சிறிய ராஜ்யம்

(புதுக்கோட்டை மற்றும் பழைய ஆட்சி: தென்னிந்திய சிறிய  இராஜ்ஜியத்தின் பரிசு, ஒழுங்கு மற்றும் அதிகாரம், புதுக்கோட்டை மண்டலத்தின் ஆரம்பகால வரலாறு,  தொண்டைமான் ராஜ்: 1686-1801)

பகுதி - 4 ஒரு சிறிய ராஜ்ஜியத்தின் சமூக உறவுகள்,

புதுக்கோட்டை மற்றும் பழைய ஆட்சி: தென்னிந்திய குட்டி இராச்சியத்தில் பரிசு, ஒழுங்கு மற்றும் அதிகாரம்

5 புதுக்கோட்டை மண்டலத்தின் ஆரம்பகால வரலாறு

6 தொண்டைமான் ராஜ்: 1686-1801

7. கள்ளர்கள்

8 அரசியல் மேலாதிக்கம் மற்றும் சமூக உறவுகள்: புதுக்கோட்டையில் சாதிகள்

9 கோவில்கள் மற்றும் சமூகம்

பகுதி -  5 காலனித்துவ மத்தியஸ்தங்கள்: ராஜாவின் கீழ் உள்ள முரண்பாடுகள்

10 விவசாயக் கிளர்ச்சி - கடைசி ஆட்சியில் தீர்க்க முடியாத பிரச்சனை

11 அரசியல் ஒழுங்கின் காலனித்துவம்: நிலக் குடியேற்றங்கள், அரசியல் தலையீடு மற்றும் கட்டமைப்பு மாற்றம்

12 கோவில்களும் மோதல்களும்: மாறிவரும் வழிபாட்டு சூழல்

13 நாடக அரசு: காலனித்துவ தென்னிந்தியாவில் சுதேச அரசியல்

பகுதி 6 முடிவு

14 இன வரலாறு மற்றும் இந்திய அரசு

இந்நூலில் மன்னரின் குடும்பத்தார் குறிப்பாக ராஜகுமாரி ரெமாதேவி பி.எஸ். சுப்பிரமணிய ஐயர், உள்ளிட்ட பலருக்கும்  நன்றி கூறி, லீலா வூட் மற்றும் சந்தியா எனும் இரு பெண்களுக்கு நூலைச்  சமர்ப்பணம் செய்துள்ளார்.

லீலா குறிப்பெடுத்து தட்டச்சு செய்தவர். சந்தியா காகிதச் சுருளை தலையில் சுமந்து அச்சு இயந்திரத்தில் கோர்ப்பவர். இவர்கள் எந்த நாட்டவர்கள் என்று தெரியவில்லை.

இந்நூலில் புதுக்கோட்டை நிலவரைப்படத்தை முதலில் வரைந்தவர்,  ஆவூர் கிறிஸ்தவ ஊழியர் Bouchet ( 1755- 1732) என செய்தி இடம்பெற்றுள்ளது.

அம்புநாடு

அம்புநாடு எனும் தலைப்பிலான பதிவு முக்கியமானது. அம்பு நாடு என்பது அழும்பில் எனப்படும் அம்புக்கோவிலை மையமாகக் கொண்டு குடியேறிய கள்ளர்களின் நாடு. திருச்சிக்கும் அருகில் அன்பில் என்கிற ஊரிலிருந்து இடம் பெயர்ந்து வந்து ஒரு நாடாக நிர்வகித்ததால் அதற்கு அன்பில்நாடு என்றும் பிறகு அது அம்பு நாடு என்றும் ஆனது. அம்பு நாடு ஒன்பது குப்பங்களைக் கொண்டது.  இங்கு குப்பம் என்பது கும்பம். இதற்கு ஒரு 'கிராமத்தின் சிறிய வீடு' என்று பொருள். பிறகு இச்சொல் மரியாதை என்பதாக பொருள் கொள்ளப்பட்டது.

அம்பு நாட்டின் கீழிருந்த ஒன்பது குப்பங்கள்

1. வடதெரு
2. தென்தெரு
3. வடக்கலூர்
4. கல்லாக்கோட்டை
5. கரம்பக்குடி
6. நெய்வேலி
7. அம்மானிப்பட்டு
8. பந்துவக்கோட்டை
9.வெள்ளாளவிடுதி

இந்த ஒன்பது கும்பங்களுக்குள்தான்  திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

பந்துவக்கோட்டை எனும் குப்பம் வடதெரு,  தென்தெரு எனும் இரு குப்பத்து மக்களை வெளியேற்றி உருவாக்கிய குப்பம்.  இந்தக் குப்பத்திற்கென்று தனி உரிமை கிடையாது. ஒரு மரியாதையை கல்லாக்கோட்டை, பந்துவக்கோட்டை என்கிற இரு  குப்பத்தார்களும் பிரித்துக்கொள்ள வேண்டும்.

வடதெரு, தென்தெரு என்கிற இரு குப்பமும் முதலில் ராஜா குப்பமாக இருந்து பிறகு இரண்டாக பிரிக்கப்பட்ட குப்பங்கள்.

அம்புக்கோவிலை மையமாகக் கொண்டு அம்புநாடு தோன்றினாலும் அந்த ஊரில் கள்ளர் குடிகள் இல்லை. அந்த ஊரிலுள்ள சோழர்க்கால சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள வீரமாகாளியம்மன் அம்பு நாட்டார்களின் குலதெய்வாக உள்ளது.

அம்பு நாட்டு கள்ளர்கள் விஜயநகர பேரரசு காலத்தில் திருப்பதி பகுதிலிருந்து காஞ்சிபுரம் வழியே வந்தவர்கள். இப்பகுதி பல்லவ அரசின் கீழிருந்த  தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்டது. ஆகவே இவர்கள் பல்லவராயர்கள் என அழைக்கப்பட்டார்கள். இவர்கள் இன்றைய லால்குடிக்கும் அருகில் அன்பில் பகுதியில் குடியேறி இப்பகுதிக்கு வந்தவர்கள். அம்பு என்கிற சொல் அன்பில் என்பதிலிருந்து பிறந்தது.

கரம்பக்குடி மற்றும் நெய்வேலி குப்பத்தார்கள் மணப்பாறை பகுதியிலிருந்து குடியேறியவர்கள். இவர்களும் சிவன் கோயிலையொட்டி குலதெய்வதை அமைத்துக்கொண்டாலும் இவர்களின் குலதெய்வம் வீரமாகாளியம்மன் அல்ல. கருப்பர் சுவாமி. இவர்கள்  மணப்பாறையிலிருந்து வடவாளம், பிறகு அங்கேயிருந்து கரம்பக்குடி, நெய்வேலி பகுதியில் குடியேறியவர்கள்.

வடகரை எனும் குப்பத்தின் குவதெய்வம் திருவோணம் மாரியம்மன்.  இந்தக்குப்பத்தின் மையம் மணிக்கிராயன்விடுதி. தென்கரையின் மையம் பிலாவிடுதி மற்றும் அம்மானிப்பட்டு.

செவ்வாய்ப்பட்டியை மையமாக வைத்து வடதெரு, தென்தெரு பிரிக்கப்பட்டது. அப்படியாக பிரிக்கையில் செவ்வாய்ப்பட்டி ஊர் இரண்டாக பிரிக்கப்பட்டு வெள்ளாளர் மக்கள் அதிகம் கொண்ட பகுதி வடதெரு குப்பம் ஆனது. இதர மக்கள் தென்பகுதி குப்பம் ஆனார்கள். பிறகு இந்த இரண்டு குப்பங்களும் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டமாக பிரிந்தன.

அம்பு நாட்டில் கடைபிடிக்கப்பட்ட தீண்டாமை மற்றும்  சாதியாக ஒடுக்கு முறைகள் குறித்து இந்நூல் பேசுகிறது.

பறையர், பள்ளர் என்கிற இரு சாதியினர் தீண்டாமை சாதியினராக ஒடுக்கி வைக்கப்பட்டார்கள். இவர்கள் அடிமைத் தொழில் செய்ய நிர்பந்திக்கப்பட்டார்கள். பறையர்கள் கிராம சேவை சாதியினராகவும் பள்ளர்கள் வேளாண்மை தொழில் சாதியினராகவும் பணிக்கப்பட்டார்கள்.

குடும்பர் மற்றும் பெரியதனக்காரர்

பள்ளர் இன மக்களின் தலைவர் குடும்பர் என்றும் பறையர் இன மக்களின் தலைவர் பெரியதனக்காரர் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

பள்ளர் பறையர் இரு சமூகத்தவர்களும் இப்பகுதியில் அதிகம் வசித்து வந்தாலும் இரு சமூகத்தினரிடையே  ஒற்றுமை ஏற்படாமல் இருப்பதற்குக் காரணம் இரு சமூகத்தவர்களும்  வடங்கலை, இடங்கலை என்று பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  அதாவது பள்ளர்கள் இடங்கலை சாதியினராகவும் பறையர்கள் வடங்கலை சாதியினராகவும் பிரிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.

இப்படியான பல செய்திகள் கொண்ட இந்நூல் புதுக்கோட்டை வரலாற்றின் ஆவணம்.

நன்றி - நூல் கொடுத்து உதவியவர் - பேராசிரியர் திரு. ச.விஸ்வநாதன் அவர்கள்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...