முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை அப்துல்லா

 புதுக்கோட்டை எழுத்தாளர் – 148

புதுக்கோட்டை அப்துல்லா, இயற்பெயர் - முகமது அப்துல்லா. திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர். தந்தையார் – முகமது இஸ்மாயில்.  வணிகவியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். புதுக்கோட்டை நகர திமுக மாணவரணி துணை அமைப்பாளர், நகர அமைப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், சிறுபான்மையினர் அணி துணை செயலாளர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நல அணி இணை செயலாளர்,.. உட்பட பல பொறுப்புகளில் செயலாற்றியவர். புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி  பறிக்கப்பட்டு அத்தொகுதி திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, கரூர் நாடாளுமன்றத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற பெருமையுடன் புதுக்கோட்டைத் தொகுதி மக்களின் ஏமாற்றத்தைப் போக்கியவர்.




தற்போது தமிழக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 66 மசோதாக்கள், புதுக்கோட்டை  நகர வீதிகளில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் பதாகைகளால், அரசியல் கடந்து பொதுமக்களின் கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.

திமுக அரசியல் பிரமுகர் என்பதைக் கடந்து எழுத்தில், தொடர் வாசிப்பில் ஓய்வு நேரத்தைக் கழிக்கிறவர். எழுத்தாளர், கவிஞர். இது காதல் மாதம், ஸ்டாலின் பஸ் என இரு நூல்கள் எழுதியுள்ளார்.


இவரது காதல் கவிதைகள் பரவலான கவனிப்பைப் பெற்றவை. காதலியை அதிகம் பேசவிடுத்து காதலன் அளந்து பேசுவது சங்க இலக்கியம் தரும் காதல் இலக்கணம். அந்த இலக்கணத்தை இவ்வாறு கவிதையில் வடிக்கிறார்.

எதை சொன்னாலும்

 நீ ‘வாவ்’ என்கிறாய்

 நான் கஞ்சன்…

ஒரு எழுத்து குறைத்து

‘ வா ’ என்றே சொல்கிறேன்.

இது காதல் மாதம், இவரது முதல் கவிதைத் தொகுப்பு. சொற்களை கையாள்வதும் எழுத்துகளை கையாள்வதும் ஒன்றல்ல. முன்னது சொற்சிலம்பம். பின்னது எழுத்துக் கரணம். எழுத்துக் கரணத்தில் தேர்ந்தவராக இருக்கிறார் இவர். நீ கண்களால் பேசும் /  வித்தையை அறிந்தபோது /  மனிதன் /  மொழியை அறிந்தான், என மொழியின் தோற்றுவாய்க்குக் கால வரையறை தருகிறார். 

உரையாடலில், எழுத்தில், பேச்சில் என் என்பதும் தன் என்பதும் ஓர்மை வித்தியாசங்கள் கொண்ட சொற்கள். பொருள் மயக்கம் தரும் சொற்களும்கூட. இவ்விரு சொற்களைக் கொண்டு இப்படியாக ஒரு கவிதைப் படைத்திருக்கிறார், கவிஞர்.

“ஒரு குட்டி பொம்மையை

கையில் ஏந்தி வந்த நம் மகள்

தன் மகள் என்னைப்

பார்க்க வந்திருப்பதாய் சொன்னாள்!

ஒரு குழந்தை தனக்கென

ஒரு குழந்தையைத் தேடும்

அதிசயத்தை யோசித்த    

நொடியில் என் நினைவில்

ஆக்ரமிக்கிறாய் நீ"







கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...