புதுக்கோட்டை எழுத்தாளர் – 148
புதுக்கோட்டை அப்துல்லா, இயற்பெயர் - முகமது அப்துல்லா. திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர். தந்தையார் – முகமது இஸ்மாயில். வணிகவியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். புதுக்கோட்டை நகர திமுக மாணவரணி துணை அமைப்பாளர், நகர அமைப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், சிறுபான்மையினர் அணி துணை செயலாளர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நல அணி இணை செயலாளர்,.. உட்பட பல பொறுப்புகளில் செயலாற்றியவர். புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி பறிக்கப்பட்டு அத்தொகுதி திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, கரூர் நாடாளுமன்றத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற பெருமையுடன் புதுக்கோட்டைத் தொகுதி மக்களின் ஏமாற்றத்தைப் போக்கியவர்.தற்போது தமிழக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 66 மசோதாக்கள், புதுக்கோட்டை நகர வீதிகளில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் பதாகைகளால், அரசியல் கடந்து பொதுமக்களின் கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.
திமுக அரசியல் பிரமுகர் என்பதைக் கடந்து எழுத்தில், தொடர் வாசிப்பில் ஓய்வு நேரத்தைக் கழிக்கிறவர். எழுத்தாளர், கவிஞர். இது காதல் மாதம், ஸ்டாலின் பஸ் என இரு நூல்கள் எழுதியுள்ளார்.
இவரது காதல் கவிதைகள் பரவலான கவனிப்பைப் பெற்றவை. காதலியை அதிகம் பேசவிடுத்து காதலன் அளந்து பேசுவது சங்க இலக்கியம் தரும் காதல் இலக்கணம். அந்த இலக்கணத்தை இவ்வாறு கவிதையில் வடிக்கிறார்.
எதை சொன்னாலும்
நீ ‘வாவ்’ என்கிறாய்
நான் கஞ்சன்…
ஒரு எழுத்து குறைத்து
‘ வா ’ என்றே சொல்கிறேன்.
இது காதல் மாதம், இவரது முதல் கவிதைத் தொகுப்பு. சொற்களை கையாள்வதும் எழுத்துகளை கையாள்வதும் ஒன்றல்ல. முன்னது சொற்சிலம்பம். பின்னது எழுத்துக் கரணம். எழுத்துக் கரணத்தில் தேர்ந்தவராக இருக்கிறார் இவர். நீ கண்களால் பேசும் / வித்தையை அறிந்தபோது / மனிதன் / மொழியை அறிந்தான், என மொழியின் தோற்றுவாய்க்குக் கால வரையறை தருகிறார்.
உரையாடலில், எழுத்தில், பேச்சில் என் என்பதும் தன் என்பதும் ஓர்மை வித்தியாசங்கள் கொண்ட சொற்கள். பொருள் மயக்கம் தரும் சொற்களும்கூட. இவ்விரு சொற்களைக் கொண்டு இப்படியாக ஒரு கவிதைப் படைத்திருக்கிறார், கவிஞர்.
“ஒரு குட்டி பொம்மையை
கையில் ஏந்தி வந்த நம் மகள்
தன் மகள் என்னைப்
பார்க்க வந்திருப்பதாய் சொன்னாள்!
ஒரு குழந்தை தனக்கென
ஒரு குழந்தையைத் தேடும்
அதிசயத்தை யோசித்த
நொடியில் என் நினைவில்
ஆக்ரமிக்கிறாய் நீ"

.jpeg)

அருமை கவிஞரே
பதிலளிநீக்கு