முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறிஞ்சித் தங்கம் க.தங்கவேலு

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 169

க.தங்கவேலுகுறிஞ்சித்தங்கம் என்று அறியப்படுகிறார். திருக்கோகர்ணம் அபிராமி நகரில் வசித்துவரும்  இவரது பூர்வீகம் இலங்கை பதுளை - கொள்ளுமண்டி தோட்டம். ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் கொடுங்கொல் தாக்குதலின் போது புலம் பெயர்ந்து தலைமன்னார் வழியாக தனுஷ்கோடி வந்தடைந்து அங்கேயிருந்து ரயிலில் புதுக்கோட்டை வந்தடைந்தவர். இந்தப் பயணத்தில் இவருக்கொரு துர்சம்பவம் நடந்தேறியது. இந்திய குடிமகன் என்கிற சான்று, மலையகத் தமிழருக்கான வெளிறிய சிவப்பு வண்ண இந்திய கடவுச்சீட்டு, மறுவாழ்விற்கான ஏனைய ஆவணங்கள், செலவுக்கு வைத்திருந்த பணம் யாவும் சூட்கேஸூடன் ரயிலில் களவுபோகிறது. மறுவாழ்வு ஆவணமில்லாமல் எந்த அரசாங்க வேலைக்கும் விண்ணப்பிக்க முடியாமல் தனியார் துறையில் வாழ்நாளைக் கழித்து வருகிறார்.

இவரது முதல் சிறுகதை உரம் பதுளை ஊவாக் கல்லூரித் தமிழ் மாணவர் மன்றத்தின் இலக்கிய வெளியீடு கலை விழா மலரில் வெளியானது. 1970 ஆம் ஆண்டு வாக்கில் வெளியான சிறுகதைகளையும் புதுக்கோட்டைக்கு அவர் புலம் பெயர்ந்தன்பிறகு எழுதிய சிறுகதைகளையும் உள்ளடக்கி கறிவேப்பிலைகள் என்கிற தலைப்பில் முதல் நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

கறிவேப்பிலைகள் எனும் இச்சிறுகதைத் தொகுப்பு பதினொரு சிறுகதைகளைக் கொண்டது. இத்தொகுப்பின் என்னுரையில் மலையகத்தின் எழுச்சி நாயகர் இர.சிவலிங்கம்,  அரசியல் கலை இலக்கிய செயற்பாட்டாளர் எச்.எச்.விக்கிரமசிங்க இருவருக்கும் நன்றி பாராட்டுகிறார்.

1970 ஆம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்து தங்களின் கடும் உழைப்பால் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தங்களை வரித்துக்கொண்ட மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள் இவை.

இன்று நாம் பேசுகிற தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக்கொள்ளும் இலங்கைத் தமிழர்கள் இரண்டு பிரிவினர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு பிரிவினர் 1700-1800 ஆண்டுகளில் வெள்ளையர்களால் இலங்கையின் மலைக்காடுகளை வெட்டியழித்து தேயிலைச் செடிகளையும் ரப்பர் மரக்கன்றுகளையும் கோப்பிச் செடிகளையும் பயிர் செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து அழைத்துச்செல்லப்பட்டவர்கள். இரண்டாவது பிரிவினர் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள்.

இக்கதைகள் முதல் பிரிவினர்களின் வாழ்வைப் பேசுகிறது. ஆழமான மொழி, மலையகத் தமிழர்களுக்குரிய ஈரமான வாழ்வு, தனித்துவமான சொல்லாடல்களைக் கொண்டவை. படங்கை, மிலாறு, துவாலை, கலிசானை, சாரம், தேத்தண்ணீ,  லேஞ்சு, குசினி,..போன்ற சொல்லாடல்கள் கதைகளைத் தனித்துவப்படுத்துகின்றன.

கறிவேப்பிலை என்கிற சிறுகதை தமிழர்களின் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு தூக்கியெறியப்படும் தொழிலாளர்களின் அந்திமக் காலத்தைப் பற்றியது. மகளின் திருமணத்திற்காக ஓடியோடி உழைக்கும் செல்லனின் அகாலக் காலம் கண்களைக் கசிய வைக்கிறது. அந்தத் தேயிலை பட்டறையில் முதலாளி வளர்ச்சிக்காக இயந்திரத்தனமாக உழைக்கும் அவர் ஒரு நாள் ஆலையின் பெல்ட்டில் அடிபட்டு இறந்துபோகிறார். குடும்பம் இழப்பீடு கேட்டு கைநீட்டி நிற்கிறது. " கவலையீனத்தால் ஏற்பட்ட இந்த விபத்திற்கு எங்களால் நஷ்ட ஈடு தரமுடியாது" என்று  தேயிலை தோட்ட நிர்வாகம் கைவிரிக்கையில், வாசகனின் நெஞ்சு இதயத்தோடு பிசைகிறது.

மொழியால் கதையால் மலையகத் தமிழர்களின் வதையை, உழைப்பை,  ஏமாற்றத்தைப் பதிவு செய்துள்ள இத்தொகுப்பு சமீப வரவில் கனவரவு.


மணிவாசகர் பதிப்பகம் , சென்னை.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...