முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலச்சந்தர்

புதுக்கோட்டை எழுத்தாளர் -177


பாலச்சந்தர், மச்சுவாடி, அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் இரு மாவட்டச் செயலாளரில் ஒருவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை நகரக்குழு உறுப்பினர். நல்ல வாசிப்பாளர், நல்ல திறனாய்வாளர், களச் செயற்பாட்டாளர்.

கல்லூரி பருவத்தில் ஒட்டடை என்கிற புனைப்பெயரில்  கவிதைகள் எழுதியவர். ஆகவே அவரது முதல் படைப்பை ஒட்டடைக் கவிதைகள் என்கிற பெயரில் கொண்டு வந்திருக்கிறார்.

மிக விரைவில் வெளியீடு காணவிருக்கும் இந்நூலுக்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரை இது.



மானமும் அறிவும் கவிதைக்கு அழகு.

அறிவுத் தூரிகைக் கொண்டு மனதைச் சொறிகையிலும் மனத்தூரிகைக் கொண்டு அறிவைச் சொறிகையிலும் கவிதைகள் பிறக்கின்றன. இரண்டிலும் கவிதைகள் பிறந்தாலும் இரண்டுமே கவிதைகள் என்றாலும் முன்னது நூலாம்படை , பின்னது ஒட்டடை. புதுக்கோட்டையின் பெரும்வரவாய் வந்திருக்கும் கவிஞர் பாலச்சந்தர் நூலாம்படையைத் தன் தூரிகையால் விலக்கி ஒட்டடைகளைச் சேகரித்திருக்கிறார். நூலாம்படை ராஜ்ஜியத்தில் ஒட்டடைகள் ஏழை, எளியவர்கள் பாமரர்கள். இந்நூல் வறியவர்களைப் பாடும், அவர்களின் அன்றாடங்களைப் பாடும் பாமரக் கவிதைகள்.

எதுகையும் மோனையும் கவிதைக்கு அழகென இலக்கிய இலக்கணம் சொல்கிறது. இவரோ ஒரு கவிதையில் மானமும் அறிவும் கவிதைக்கு அழகு என்கிறார்.  சுரணை எனும் இக்கவிதையை வாசிக்கும் யாருக்கும் பட்டுக்கோட்டையார் நினைவுக்கு வருவார், ஆலங்குடி கவிஞர் சுந்தரபாரதி நினைவுக்கு வருவார். இக்கவிதையின் ஒவ்வொரு வரியும் ஒரு சிறுகதையின் தலைப்பு. தலைப்பு வரி கவிதையென்று இதற்குப் புதுவடிவப் பெயர்சூட்டலாம்.

காதலைப் பாடித்தான் கவிஞன் பிறந்தான். பூமியில் நடந்தேறும் பல கோலங்களைப் பார்த்து முகம் சிவக்கும் அவன் காதலைக் காலமாகப் பாடத் தொடங்கினான். இங்குக் காலம் என்பது தடம், சுவடு, நிகழ்வு. சுண்டல் விற்பவனின் இலாவகம் இது.  சுண்டலைக் குறைவாக வைத்துக் காகிதங்களை நிறைய மடிப்பதைப் போல இவர்  காதலைக் குறைவாக வைத்துக் காலங்களைப் பெரிதாகச் சுற்றுகிறார்.

இவரது கவிதைகளில் முதுமை மீது மழை பொழிகிறது. இளமை குடை பிடிக்கிறது.  மழைக்கு ஒதுங்கிய சொற்களைத் தூரிகைகளால் சேகரித்துக் கவிதை செய்திருக்கிறார்.

 புதுக்கோட்டை கவிஞர்களின் கோட்டை. சமீப கணக்கெடுப்பின்படி நானூறுக்கும் குறையாமல் படைப்பாளர்களைக் கொண்டிருக்கிறது.  கவிதை, சிறுகதை, புதினம், ஆய்வு, கட்டுரை, விமர்சனம், திறனாய்வு என ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் அடையாளப்படுகிறார்கள்.  குறிப்பிட்ட சிலர் இரண்டுக்கும் மேற்பட்ட துறைகளில் சாதித்திருக்கிறார்கள்.  திறனாய்வில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் படைப்பிலக்கியம் பக்கம் திரும்பி படைப்புப் பயிர் செய்கிறார்கள்.  அவர்களின் ஆய்வுநோக்கில் சமூகப் பிரதிபலிப்பு சேர்ந்துகொள்கையில் அவர்கள் வெளிக்கொணரும் முதல் படைப்பு  முதிர்ந்த படைப்பாக  அமைந்துவிடுகிறது. கவிஞர் பாலச்சந்தரை நான் அப்படியாகவே பார்க்கிறேன். நல்ல வாசிப்பாளர் இவர். திறனாய்வாளர், படைப்புலகைத் தொடர்ந்து கவனித்து வருகிறவர். ஒரு படைப்பிலக்கியவாதிக்கான அத்தனை இலக்கண அணிகலன்களைக் கற்று, பெற்று ஒட்டடை கவிதைகள் படைத்திருக்கிறார். கவிதைகளாலான பூமிக்கு முதல் மழை இவர். மழை அழகிற்கும் பெய்கிறது, தன் இருத்தலுக்கும் பெய்கிறது. மக்களுக்குப் பெய்யும் மழை சிறுமழையாயினும் அது நல்ல மழையே!

 இவரது கவிதைகளில் அதிகம் கண்ணாடியைப் பார்க்க முடிகிறது.  கண்ணாடியில் முகம் பார்க்கலாம், நிறம் பார்க்கலாம். இவரோ அந்தரங்க ரகசியத்தை வெளியே கசியவிடாத இரட்டைப் பிறவியாகப் பார்க்கிறார். இவரது ஒரு கவிதை  இவ்வாறு பாடுகிறது.

"படுகுழியில்
மீந்துபோன மழைநீர் 
கண்ணாடியாக
வானத்தை
ஒளிப்படம் எடுக்கிறது"

 நல்ல காட்சிக்கவிதை இது. இயற்கையை அழகுபட படமெடுக்கும் இவர் அதே கண் வீழ்த்திக்கொண்டு சமூக அவலத்தையும் படமெடுக்கிறார்.  "சாதி எனும் சந்திப் பிழையின் சதியால் என் சந்ததி" என்கிறார் ஒரு கவிதையில். சாதி என்பது சந்திப்பிழை மட்டுமா?  சந்ததிப்பிழையும் கூட.

 சக படைப்பாளனாக இவர் குறித்து இந்தச் சமூகத்திற்குச் சொல்லவருவது  ஒன்றுதான். நகரங்களைத் தூய்மை செய்கிறோம் என்கிற பெயரில் சேரிகளை அப்புறத்துவதைப்போல நூலாம்படைகளுக்கு வெள்ளையடிக்கிறோமென்று ஒட்டடைகளை அப்புறப்படுத்தும் இந்நிலத்தில் ஒட்டடைகளைச் சேகரித்து அதைக்கொண்டு நூல் படைத்திருக்கிறார். கவிஞர் பாலச்சந்தரின் சேவை மொழிப் பணியுடன் சமூகப் பணியும் சேர்ந்தது. கவிதை  காலத்தோடு சேர்ந்து இவரைத் தன் வரவில் வைக்கட்டும்,,,

அன்புடன்
அண்டனூர் சுரா.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...