புதுக்கோட்டை எழுத்தாளர் - 227
பாவலர் சேந்தன்குடிச் செந்தமிழாழன், இயற்பெயர் த. பாலசுப்பிரமணியன். தங்கை பாலா ஆசினி, சேந்தன்குடி செந்தமிழாழன் எனும் இரு புனைப் பெயர்களில் எழுதி வருகிறார். (பெற்றோர் - ஆ.தங்கையன், த.பத்மாவதி ) புதுக்கோட்டை. தொடக்கப்பள்ளி ஆசிரியர்.
ஆந்திராவில் எழுதப்பட்ட நானிலு கவிதை வடிவம் இங்கே தன்முனை கவிதையாக வடிவம் பெற்றிருக்கிறது என்று வாழ்த்துரை வழங்கியிருக்கும் தமிழ்ச்செம்மல் பாவலர்மணி இராம வேல்முருகன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.
மனிதம் தேடிய பயணம் ( தன்முனைக் கவிதைகள் ) எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூலுக்கு அணிந்துரை முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம். 300 தன்முனை கவிதைகள் கொண்ட இத்தொகுப்பில் ஒரு கவிதை.
உழைத்தால் வருவது சோர்வு
உழைக்காமல் வருவது தாழ்வு
செதுக்காமல் இல்லை சிலை
செயலால் உயரும் உன் நிலை

இனிய நன்றி🙏💕🙏💕
பதிலளிநீக்குதமிழில் இதுவரை தன்முனைக் கவிதை தொகுப்பு நூல் 24 நான்கு வெளிவந்ததுள்ளது தெலுங்கில் நானினு வடிவம் இங்கே தன் முனையாக வெளிவர முயன்று வருகிறோம் கவிதை நான்கு வரிகள் வரவேண்டும்
பதிலளிநீக்குமுதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்து முற்றுப்பெற்றும் அடுத்த இரண்டு வரிகளில் எதிர்கருத்தையோ நேர்மறையான கருத்தையே தாங்கி வரலாம்.
இந்நூல் தேவைப்படுவோர்
9865209360 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தம்பி அண்டனூர் சுராவின் பணி சிறக்க வாழ்த்துகள்..
கவிதை உலகில் பன்மொழி வடிவங்கள் தமிழ் மொழியில் தமிழ் வடிவம் பெற இக்கவிதை உங்கள் உள்ளங்களோடும் உணர்வோடும் உறவாடும் வாசியுங்கள் உறவுகளே