முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேந்தன்குடிச் செந்தமிழாழன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 227


பாவலர் சேந்தன்குடிச் செந்தமிழாழன், இயற்பெயர் த. பாலசுப்பிரமணியன். தங்கை பாலா ஆசினி, சேந்தன்குடி செந்தமிழாழன் எனும் இரு புனைப் பெயர்களில் எழுதி வருகிறார். (பெற்றோர் - ஆ.தங்கையன்,  த.பத்மாவதி ) புதுக்கோட்டை. தொடக்கப்பள்ளி ஆசிரியர்.

ஆந்திராவில் எழுதப்பட்ட நானிலு கவிதை வடிவம் இங்கே தன்முனை கவிதையாக வடிவம் பெற்றிருக்கிறது என்று வாழ்த்துரை வழங்கியிருக்கும் தமிழ்ச்செம்மல் பாவலர்மணி இராம வேல்முருகன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

மனிதம் தேடிய பயணம் ( தன்முனைக் கவிதைகள் ) எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூலுக்கு அணிந்துரை முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம். 300 தன்முனை கவிதைகள் கொண்ட இத்தொகுப்பில் ஒரு கவிதை.

உழைத்தால் வருவது சோர்வு
உழைக்காமல் வருவது தாழ்வு
செதுக்காமல் இல்லை  சிலை
செயலால் உயரும் உன் நிலை 



கருத்துகள்

  1. தமிழில் இதுவரை தன்முனைக் கவிதை தொகுப்பு நூல் 24 நான்கு வெளிவந்ததுள்ளது தெலுங்கில் நானினு வடிவம் இங்கே தன் முனையாக வெளிவர முயன்று வருகிறோம் கவிதை நான்கு வரிகள் வரவேண்டும்
    முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்து முற்றுப்பெற்றும் அடுத்த இரண்டு வரிகளில் எதிர்கருத்தையோ நேர்மறையான கருத்தையே தாங்கி வரலாம்.


    இந்நூல் தேவைப்படுவோர்

    9865209360 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


    தம்பி அண்டனூர் சுராவின் பணி சிறக்க வாழ்த்துகள்..




    கவிதை உலகில் பன்மொழி வடிவங்கள் தமிழ் மொழியில் தமிழ் வடிவம் பெற இக்கவிதை உங்கள் உள்ளங்களோடும் உணர்வோடும் உறவாடும் வாசியுங்கள் உறவுகளே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

மன்னராட்சிக்கு முந்தைய கால வரலாற்றை எழுதியவர்

புதுக்கோட்டையை எழுதியவர்கள் வரிசை - 03 (புதுக்கோட்டை எழுத்தாளர் - 233)  டாக்டர் வீ.மாணிக்கம் , புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பணியாற்றியவர். வரலாற்றுத் துறை. இவரது மணி விழா காலத்தையொட்டி, " புதுக்கோட்டை வரலாறு " எனும் இந்நூலைப் படைத்துள்ளார். இவர் எழுதிய மற்றொரு முக்கியமான நூல் கொங்கு நாடு. வரலாறு என்பது மன்னர்களின் வரலாறு அல்ல, இனக்குழுக்களின் இடம் பெயர்வு வரலாறு எனும் கருத்தியலோடு ஒத்துப்போகிறவர். இனக்குழுச் சமுதாயத்தின் சிதைவடையும் போக்கே இந்திய வரலாறு எனும் கருத்தியல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தாபரின் இனக்குழுச் சமுதாயத்திலிருந்து அரசு எனும் நூலில் இக்கருத்தியல் மெய்ப்பிக்கப்பட்ட போதிலும் வரலாற்று ஆய்வுகளில் இது இன்னும் தீர்க்கமாக எதிரொலிக்கவில்லை. இனக்குழுச் சமுதாயத்தின் எச்சங்கள்  இன்றும் செறிவாகக் காணப்படும் புதுகைப் பகுதியின் ஆய்விற்கு இக்கருத்தியல் நன்கு பொருந்தும் என்கிறார், இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர். மேலும் இவர் ஒரு நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டின் குறுநிலப் பரப்புக்களின் வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கியது என்கிறார். புதுக்கோட்டை கல்வெட்டுகளில் குறிப...